பெரிய அளவில் பர்ஷனாலிட்டி என்பது இல்லாமல் பர்பாமென்ஸ் என்பதை முன்வைத்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பவர் லட்சுமிமேனன். அவர் நடிக்க வந்த நேரத்தில் அவரை எந்த நடிகையும் போட்டியாக நினைக்கவில்லை. ஆனால் அதே கேரளத்திலிருந்து வந்த நஸ்ரியா, லட்சுமிமேனனை போட்டி நடிகையாக கருதி, அவர் நடிக்கயிருந்த சில படஙக்ளை கொக்கி போட்டு இழுத்து வந்தார்.
இதனால், போட்டியே இல்லாமல் தனி ஏரியாவில் கம்பு சுத்திக்கொண்டிருந்த லட்சுமிமேனனுக்கு பெரிய தலைவலியாகி விட்டது. இதனால் படக்கூலியைகூட குறைத்து சில படங்களை கைப்பற்றி வந்தார். இந்த நேரத்தில்தான் திடீரென்று நஸ்ரியா, பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்ததும், அப்பாடா தனக்கு இருந்த ஒரேயொரு எதிரியும் காலி என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆனால், அவர் நிம்மதியான மனநிலையில் இருந்து கொண்டிருந்த சில வாரங்களிலேயே அவருக்கு எதிராக இன்னொரு புதிய எதிரி முளைத்து விட்டார். அவர் வேறு யாருமல்ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாதான். லட்சுமிமேனனை போன்று வட்டம் போட்டு நடிக்காமல், கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சிப்புயலாகவும் உருவெடுக்க தயார் என்று கட்டம் கட்டி நடிக்கயிருப்பதை அவர் முன்மொழிவதால், இப்போது லட்சுமிமேனனை துரத்திய சில கம்பெனிகள் சத்தமில்லாமல் ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்துள்ளது.
இந்த சேதியறிந்து, ஒரு தலைவலி தீர்ந்து விட்டது என்று பார்த்தால், அடுத்து அதைவிட பெரிய தலைவலி வந்து நிற்குதே என்று தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார் லட்சுமிமேனன். இதையடுத்து, ஸ்ரீதிவ்யா போன்ற புதிய எதிரிகளை சமாளிக்க கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தால் மட்டும்தான் முடியுமா? இல்லை வேறு வழி ஏதேனும் உள்ளதா? என்று சில சினிமா அபிமானிகளுடன் ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.

0 comments:
Post a Comment