Thursday 27 February 2014

Leave a Comment

‘ சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஹீரோவே இல்லாத படமா..?



ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம், ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’. சான்ட்ரா எமி உட்பட 25,க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.

ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை: சிவ சரவணன், ஹனீஸ் யுவானி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி யுரேகா இயக்குகிறார்.

 படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘‘மதுரை சம்பவம்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கியுள்ள இந்தப்படத்தில், ஹீரோ கிடையாது. நான் எழுத்தாளர் வேடம் ஏற்றுள்ளேன்.

பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட கதை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

சென்சார் குழுவினர், ‘விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படம்’ என்று பாராட்டினர்’’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment