Friday 28 February 2014

Leave a Comment

கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்..!



கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது.

எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன. சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா?என்று அவ்வப்போது கேள்விகள் எழுந்த நிலையிலும் இன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இந்த மெயிலில் தான் வைத்திருக்கிறார்கள்.அப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு திடுக் செய்தி வந்துள்ளது.அதாவது நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறதாம்.

தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 10 தவறான இ-மெயிலில் (ஸ்பேம்) ஒன்று இந்தியாவில் இருந்து வருகிறது. சைபர் குற்றங்கள் தடுப்பதில் ஒரு நாட்டினரால் மட்டும் முடியாது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தான் குற்றங்களை தடுக்க முடியும். உலகம் முழுதும் உள்ள 50,000 கம்பெனிகளில் தினமும் சைபர் அட்டாக் நடந்து வருகிறது.அதே சமயம் கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ இப்படி பல பெரிய நிறுவனங்களையே குறி வைத்து ஹேக்கர்கள் இது மாதிரி அட்டாக்கை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறது என்றும் அதிலும் இந்த மேட்டரே இன்று தான் கூகுளுக்கு தெரியும் என்பதால் இது குறித்து இப்போது தான் எத்தனை பேர் திருடப் பட்டுள்ளது என்று கணக்கு எடுத்து கொண்டிருக்கிறதாம்.

0 comments:

Post a Comment