Thursday 27 February 2014

Leave a Comment

ஏப்ரல் முதல் 'கபார் சிங் 2'...!



 'கபார் சிங்' இரண்டாம் பாகம் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிப்பு.

பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தெலுங்கில் மெகாஹிட்டான படம் 'கபார் சிங்'. ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில், தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருந்தார். இந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'டபாங்' படத்தின் ரீமேக் இது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'கபார் சிங் 2' படத்தின் பணிகள் தொடங்கியது. 'டபாங் 2' படத்திற்கும் 'கபார் சிங் 2' படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்று படக்குழு அறிவித்தது.

இப்படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க, சம்பத் நந்தி இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

பவன் கல்யாண் மற்றும் அவரது நண்பர் சரத் மாரர் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் பவன் கல்யாணுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன், 'Oh My God' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பவன் கல்யாண்.

0 comments:

Post a Comment