Thursday 27 February 2014

Leave a Comment

கர்நாடக அணி வீரர்களை ஸ்ருதி ஹாஸன் வேண்டும் என்றே உதாசினப்படுத்தினாரா...!



நடிகர்கள் விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின்போது கோப்பையை வென்ற கர்நாடக அணி வீரர்களை நடிகை ஸ்ருதி ஹாஸன் உதாசினப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் போட்டி அண்மையில் நடந்தது. இதில் சென்னை அணி தோல்வியைத் தழுவி வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் சென்றன.

ஹைதராபாத்தில் கடந்த 23ம் தேதி நடந்த இறுதிப் போட்டியை பார்க்க நடிகை ஸ்ருதி ஹாஸன் வந்திருந்தார்.

போட்டியின்போது ஸ்ருதி ஹாஸன் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தாராம்.

இறுதிப் போட்டியில் வென்ற கர்நாடக அணி மேடைக்கு வந்தபோது ஸ்ருதி அவர்களை சட்டை செய்யவே இல்லையாம். ஒரு வீரரைக் கூட அவர் பாராட்டி கை குலுக்கவில்லையாம்.

ஸ்ருதி கர்நாடக அணி வீரர்களை உதாசினப்படுத்தியதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பார்வையாளர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கர்நாடக அணி வீரர் ஒருவர் ஸ்ருதியுடன் கை குலுக்க வந்தபோது அவர் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு கம்மென்று இருந்துள்ளார். மேலும் கோப்பையை கர்நாடக அணி பெற்ற கையோடு அவர் மேடையை விட்டு சென்றுவிட்டாராம்.

ஸ்ருதி நடந்து கொண்டது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதா? இல்லை அவர் வேண்டும் என்றே செய்தாரா? தெரியவில்லை. ஆனால் அவரின் செயல் விளையாட்டு பிரியர்களுக்கு பிடிக்காமல் போயுள்ளது.

0 comments:

Post a Comment