Thursday 27 February 2014

Leave a Comment

திடீர் தலைமறைவுக்கு காரணம் என்ன? ஜீவன்...!



யுனிவர்சிட்டி, காக்க காக்க, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஜீவன்.

இப்படங்கள் வெளியாகி 2 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அதன்பிறகு ஜீவன் கோலிவுட் பக்கம் தலைகாட்டவில்லை. பல இயக்குனர்கள் அவரை வலைவீசி தேடினார்கள்.

ஆனால் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவருக்கு வந்த பல வாய்ப்புகள் கைநழுவிப்போனது.

பல்வேறு தேடுதல்களுக்கு பிறகு அவர் தனது சொந்த ஊரில் இருப்பதாக தகவல் வந்தது. அவரை தொடர்பு கொண்ட இயக்குனர் செல்வா தான் இயக்கும் தூதன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

இப்படம் மூலம் 2 வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் மீண்டும் நடிக்க வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலா மகள் சவுந்தர்யா நடிக்கிறார்.

ரங்கா பாலாஜி ஒளிப்பதிவு. குரு சம்பத்குமார் வசனம். விஜய் இசை. வி.சுந்தர் தயாரிக்கிறார்.

 இப்படம்பற்றி இயக்குனர் கூறும்போது, உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் என்ற எம்ஜிஆர் பட பாடலை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

0 comments:

Post a Comment