Friday 28 February 2014

Leave a Comment

நீதிக்கு கிடைத்த வெற்றி...உதயநிதி படத்துக்கு வரி விலக்களிக்க உத்தரவு..!



உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் வெளியானது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை.

இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடாந்தார். “எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. என் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார். பதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து “இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“படம் கடந்த பெப்ரவரி 14ம் திகதி வெளியானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய இலாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை. கோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 comments:

Post a Comment