பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் 'உக்ரம்'. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ல் ரிலீஸ் ஆனது.
'லூசியா' படத்துக்குப் பிறகு 'உக்ரம்' கன்னடத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்படுகிறது.
சமீபத்தில் 'உக்ரம்' படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். இப்படியெல்லாம் கேங்ஸ்டர் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட்டவர் இப்போது ரீமேக் செய்யவும் முடிவெடுத்துவிட்டார்.
தமிழ், இந்தி என இரு மொழிகளில் தனுஷ் ரீமேக் செய்கிறார். இது தனுஷ் ரீமேக் செய்யும் இரண்டாவது கன்னடப் படம். சிவராஜ்குமார் நடித்த 'ஜோகி' என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் 'பரட்டை என்கிற அழகு சுந்தர,' ஆனது.
தனுஷ் 'உக்ரம்' ரீமேக்கில் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். பிரசாந்த் நீல் தமிழ், இந்தியிலும் இயக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment