Thursday 27 February 2014

Leave a Comment

நயன்தாரா பார்வையாலே ரசிகர்களை கவரக்கூடியவர் - புகழும் பிரபலம்...!



 சமீபத்தில் தோட்டா ராய் கூறிய விஜய் படத்தின் கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை வேறு என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

 மசாலா சினிமா எப்படியிருக்கும் என்று ஹாலிவுட்டுக்கே பாடம் நடத்தும் கில்லாடிகள் தெலுங்கு திரையுலகினர். ஆனால் சேகர் கம்முலா போன்ற நம்பிக்கை தரும் இயக்குநர்கள் தெலுங்கு சினிமாவின் முகத்தை மெல்ல மாற்றி வருகிறார்கள். ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்துக்காக சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருது, ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகள் எட்டுமுறை என்று கௌரவிக்கப்பட்ட இவர் தற்போது நயன்தாரா நாயகியாக நடிக்கும் ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்கி முடித்திருக்கிறார். இது வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி சாதனை படைத்த ‘கஹானி’ இந்திப்படத்தின் ரீமேக். இந்தப் படத்தை பிரபலப்படுத்துவதற்காக சென்னை வந்திருந்த சேகர் கம்முலாவை சந்தித்தோம்.

உங்களின் ‘லீடர்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்க விரும்பியதாக செய்திகள் வெளியானதே அது உண்மையா?

இல்லை. ஆனால் அந்தப் படத்தை ரஜினி பார்த்தால், கண்டிப்பாக அதில் அவர் நடிக்க சம்மதிக்கக் கூடும் என்று எண்ணி அதைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் விரும்பினால் அதை அவருக்காக இயக்கத் தயாராக இருக்கிறேன். ரஜினியை இயக்க வேண்டும் என்பது என் கனவு. ரஜினியின் பதிலுக்காகவே இந்தப் படமும் கதையும் காத்திருக்கிறது.

புதுமுகங்களை வைத்து வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துள்ள நீங்கள், இப்போது முன்னணி நட்சத்திரங்களை நாட ஆரம்பித்தது ஏன்?

கதைதான் நட்சத்திரங்களை தீர்மானிக்கிறது. ‘லீடர்’ படத்தின் கதையில் ராணா பொருந்தியது எத்தனை கச்சிதமோ அப்படித்தான் ‘கஹானி’ ரீமேக்கில் நயன்தாரா பொருந்தியதும். முன்னணி நட்சத்திரங்களுக்காக கதை எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லையே தவிர, வெற்றிபெற்ற ஒரு கதையில் முன்னணி நட்சத்திரங்களை பொருத்துவது அதன் வணிக வெற்றியை உறுதிப்படுத்திவிடும்.நல்ல கருத்துக்கள் முன்னணி நட்சத்திரங்கள் வழியாக அதிக ரசிகர்களை சென்று அடையலாம்.

நயன்தாராவுக்காக ‘கஹானி’ கதையையே தமிழில் மாற்றிவிட்டீர்களாமே? குறிப்பாக ‘கஹானி’யில் நிறைமாத கர்ப்பிணியாக வித்யாபாலன் கணவனைத் தேடி அலையும்போது ரசிகர்களிடம் இரக்கமும் பதற்றமும் இருந்தது. ஆனால் நயன்தாராவை அப்படிக்காட்டவில்லை அல்லவா?

ஆமாம். நயன்தாரா தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு ‘ஏஞ்சலிக் இமேஜூடன்’ இருக்கும் மிகப்பெரிய நட்சத்திரம். அவரை கர்ப்பிணிப் பெண்ணாக காட்டுவது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதேநேரம் ரீமேக் என்று வரும்போது தென்னிந்திய மனநிலை, ரசனைக்கு ஏற்ப கதாபாத்திரங்களை மாற்றிய மைக்கலாம். அடிப்படை கதை யமைப்பில் கைவைக்கக் கூடாது அவ்வளவுதான். இன்றைய பெண்களை எனது படங்களின் சுதந்திரமானவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் காட்டியிருக்கிறேன். உண்மையும் அதுதான். எனவேதான் நயன்தாரவை கர்ப்பிணிப் பெண்ணாகச் சித்தரித்து, அந்தக் கேரக்டருக்கு தேவையில்லாத அனுதாபத்தை ஏற்படுத்த விரும்ப வில்லை. வேகமாக நகரும் ஒரு திரில்லர் கதையில் அனுதாபம் எடுபடாமலும் போய்விடலாம்.

நயன்தாராவின் நடிப்பு எப்படி?

ஒரிஜினல் ‘கஹானி’ படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் வித்யா பாலன் நடிப்பெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவார்கள். நயன்தாரா திறமையான நடிகை மட்டுமல்ல, ரசிகர்களை ஆழமாக ஊடுருவிய ஒரு நட்சத்திரம். ஹைதராபாத் நகரில் வெளிப்புறப்படப்பிடிப்பு நடந்தபோது போக்குவரத்து பிரச்சினை ஏற்படும் அளவுக்கு 10 ஆயிரம் பேர் அரைமணி நேரத்தில் ஒரு மாநாடு போல கூடிவிட்டார்கள். நயன்தாராவுக்கு அவ்வளவு ரசிகர்கள் சக்தி இருக்கிறது.

மகேஷ்பாபு பட போஸ்டரில் கதாநாயகியை ஒரு நாய் போல சித்தரித்த விவகாரத்தில் நீங்கள் சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து சொன்னீர்களே? மகேஷ்பாபு கால்ஷீட் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

எனது நலனை மட்டும் நான் கருத்தில் எடுத்துக்கொண்டிருந்தால், இதுபோன்ற அவலங் களை கண்டித்திருக்க மாட்டேன். பெண்கள் தன்னம்பிக்கையோடு எழுந்துவரும் காலம் இது. அப்படியிருக்கும்போது நாம் மீண்டும் கற்காலத்தை நோக்கி அவர்களை தள்ளுவதில் என்ன நன்மை ஏற்படப்போகிறது? நமது பிள்ளைகளும் இதே சமூகத்தில்தானே இருக்கிறார்கள். இதை யோசித்திருந் தால் இப்படியொரு போஸ்டருக்கான யோசனையே நமக்கு வந்திருக்காது அல்லவா?

ஆனால் ‘கஹானி’ ரீமேக் படத்துக்கான விளம்பர போஸ்டரில் “என் கணவரை காணவில்லை” என்று நீங்களும் ஒரு தவறான போஸ்டரைத்தானே விளம்பரத்துக்கு பயன்படுத்தினீர்கள்?

தவறுதான். ஆனால் அந்தப்போஸ்டர்போல இது பிற்போக்கானது அல்ல. இந்தபோஸ்டர் யாரையும் குழப்பிவிடக் கூடாது என்பதற்காக போஸ்டரின் அடியில் இந்த நபரைபற்றி தகவல் தெரிந்தால் படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு சொல்லுங்கள் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

சமீபத்தில் தோட்டா ராய் சௌத்ரி அளித்த பேட்டியில், இப்படத்தின் கதையை கூறிவிட்டார் எனப்பட்டது. அவர் சொல்லியதனடிப்படையில், கதையில், இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை எனப்பட்டது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் படத்தின் கதை இதுவல்ல என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். தோட்டா ராய் செளத்ரி படத்தின் வில்லனே அல்ல, நாங்கள் படத்தின் வில்லனை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, கொல்கத்தாவில் படமாக்கப்பட்ட துரத்தல் காட்சிக்கு ஒருவர் தேவைப்பட்டது. அதற்காக மட்டுமே தோட்டா ராய் செளத்ரி நடித்து கொடுத்தார். படத்தின் கதையே வேறு என்றும் தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment