Thursday 27 February 2014

Leave a Comment

இன்றைய ஹீரோக்களோடு போட்டிபோட இதெல்லாம் வேணுங்க...!



ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கும் படம், சாஹசம். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிப்பவர் முடிவாகவில்லை.

 மற்றும் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கதை திரைக்கதையை திருவிக்ரம் எழுதியுள்ளார்.

மனோகர் வசனம். மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண்ராஜ் வர்மா இயக்குகிறார்.

 படம் பற்றி தியாகராஜன் கூறும்போது, இது ஆக்ஷன், ரொமான்ஸ் கதையை கொண்ட படம். பிரஷாந்த் 20 கிலோ எடை குறைந்துள்ளார்.

படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சீனாவில் உள்ள ஹனாய் என்ற கிராமத்தில் படமாக்கினோம்.

பிரஷாந்த் காராத்தேவில் பிளாக்பெல்ட் வாங்கியிருப்பதால் அந்த சண்டைக்காட்சி எளிமையாக இருந்தது. வாழ்க்கையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிற ஓர் இளைஞனின் கதைதான் படம்.

திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் நடக்க உள்ளது என்றார்.

0 comments:

Post a Comment