Monday 24 March 2014

அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது..!




அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது!

விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்.

எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் – ரஜினிகாந்த்.

 இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி.

எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் விஜய். பத்து ரூபாய் நோட்புக் கொடுப்பதைக் கூட பத்திரிகையாளர்களை அழைத்துத்தான் கொடுப்பார்.

சில மாதங்களுக்கு முன் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 லட்சம் கொடுத்ததும் இப்படிப்பட்ட பப்ளிசிட்டி ரகம்தான்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அஜித், ரஜினிகாந்த் மாதிரி. தன் வருமானத்தில் பெரும்பகுதியை நலிந்தவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் அஜித்.

உதவி பெறுபவர்களுக்கே இது அஜித் செய்த உதவி என்று தெரியாமலே ஏராளமான பேருக்கு உதவிகளை செய்திருக்கிறார் அஜித்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அஜித், தன்னிடம் பணிபுரிபவர்களை மட்டும் சும்மாவிட்டுவிடுவாரா என்ன? கேளம்பாக்கம் அருகில் 12 கிரவுண்ட் நிலத்தை வாங்கி, தன்னிடம் வேலை பார்க்கும் 12 பேருக்கு கொடுத்ததோடு, அந்த நிலத்தில் தன் செலவிலேயே வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமே வாங்கிக் கொண்டாராம்.

விஜய்யோ தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் வாடகை வாங்கிக் கொண்டுதான் வீடு கொடுத்திருக்கிறார்.

 அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது!
+

நடிகையை லிப்டுக்குள் மானபங்க படுத்திய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு.....!



இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார்.


நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டிற்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, டிப்–டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.


லிப்டுக்குள் நுழைந்ததும் நடிகையை அந்த வாலிபர் கட்டியைனைத்து மானபங்க படுத்த முயன்றுள்ளார் ஆனால் நடிகை அதற்குள் சுதாரித்து கொண்டு வாலிபருக்கு கீழ்பக்கமாக உதைகொடுத்து தப்பித்துள்ளார். பாதுகாவலர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் ஓடிவிட்டார்


இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. என்னை மானபங்கம் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்
+

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்...!



அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன.


அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் மிகவும் பின்தங்கியே இருப்பதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லையோ? என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மை என்ன தெரியுமா?


அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷைத் தேடி வந்த பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாம். பெரிய சம்பளம், கை நிறைய அட்வான்ஸ் என்றெல்லாம் ஆசைக்காட்டியும் தினேஷ் அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள் அவரைத் தேடிப்போய் திரும்பி வந்த உதவி இயக்குநர்கள்.


கதை எனக்குப் பிடிக்க வேண்டும். அப்புறம் முழுக்கதையையும் சீன் பை சீன் சொல்ல வேண்டும். படத்தின் ஸ்கிரிப்ட்டை பைண்ட் செய்து புத்தகமாகக் என்னிடம் கொடுக்க வேண்டும்.


 அதைப் படித்துப்பார்த்து எனக்கு திருப்தியாக இருந்தால்தான் கால்ஷீட் தருவேன் - என்று சொல்லிச் சொல்லியே தேடி வந்த பல இயக்குநர்களை தலைதெறிக்க ஓட வைத்துவிட்டாராம் தினேஷ்.


இப்படி கண்டிஷன் மேல் கண்டிஷனை போட்டதால் தான் தினேஷின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம்விரும்பிகள்.


சில வருடங்களுக்கு முன், சித்திரம் பேசுதடி என்ற படம் வெற்றியடைந்தபோது, அப்படத்தின் நாயகனான நரேன், தன்னை மினி கமல்ஹாசனாக நினைத்துக் கொண்டு இப்படித்தான் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டு கதை சொல்ல வந்த இயக்குநர்களை கதற அடித்தார். பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை தினேஷ் உணர்ந்தால் சரிதான்!
+

அம்மாவை கேட்காம இந்த காரியத்த பண்ணலாமா? இப்ப பாரு என்ன ஆச்சு...!



பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதோடு சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இதில் அதிமுக சார்பில் நடிகர்கள் ராமராஜன், தியாகு, வையாபுரி உள்பட பல நடிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.


அந்த வகையில், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவரை ஆதரித்து கடந்த சில தினங்களாக தியாகு, வையாபுரி இருவரும் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.


அப்படி அவர்கள் செல்லும் ஊர்களில் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம்.


அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனால்,


அந்த ஏரியாவைச்சேர்ந்த பறக்கும் படை பிரிவு தாசில்தார் குணசேகரன் வையாபுரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தெடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
+

விஜய்க்காக நிறைய யோசிக்கிறேன் அனிருத்..!



தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.


 சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார்.


மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார். அப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை.


ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம். அதிலும், சமீபத்தில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம்.


அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.
+

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்...?



சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.
+

மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா..?



இஸ்லாமியராக மதம் மாறிய பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சென்னையில் இருப்பதே இல்லை என்றும், பெரும்பாலும் மலேசியாவில்தான் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வாய்ஸ் மிக்ஸிங் எனும் பாடல் ஒலிப்பதிவு நடைபெறும்போது மட்டும் சென்னைக்கு வரும் யுவன்சங்கர்ராஜா, ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு, மீண்டும் மலேசியா கிளம்பி விடுகிறாராம்.


இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் கம்போஸிங் செய்யும்போது சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநரை மலேசியாவுக்கு வரச்சொல்கிறாராம் யுவன்சங்கர்ராஜா.


ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதால், அதற்கு முன் அத்தனைப் பாடல்களையும் பதிவு செய்துவிட வேண்டும் என்று அவசரப்படுத்தினாராம் ஹரி. உடனே அவரையும்,


படத்தின் நாயகன் கம் தயாரிப்பாளர் விஷாலையும் மலேசியாவுக்கு வரச்சொன்ன யுவன்சங்கர்ராஜா, அங்கேயே மொத்தப் பாடல்களின் கம்போஸிங்கையும் முடித்துக்கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, விரைவில் சென்னைக்கு வந்து அனைத்துப் பாடல்களின் ரெக்கார்டிங்கையும் முடித்துத் தருவதாகவும் சொல்லி அனுப்பினாராம்.


யுவன்சங்கர்ராஜா இஸ்லாமியராக மாறியபோது, மலேசியப் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியும் அப்போது அடிபட்டது. அந்த செய்திக்கும், தற்போது மலேசியாவில் யுவன்சங்கர்ராஜா டேரா அடிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அல்லது மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?
+

Sunday 23 March 2014

ஹீரோவாக நடிப்பது ஏன்..? சந்தானம் விளக்கம்



தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார். சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள்.

இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது. ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும்.

அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.

வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை. நான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல.

ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.
+

Saturday 22 March 2014

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...!



திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான – பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

பிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.

முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்து கொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜவாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.
+

நகச்சுற்று (Paronychia) பற்றிய அதிர்ச்சி தகவல்கள்...!



நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.

இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான்.

பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.

பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.

எவ்வாறு ஏற்படுகிறது?

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.

சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.

சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris)போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.

நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.

பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்

வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.

மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics)உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.

ஏற்படாமல் தடுத்தல்

நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.

நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.

நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.

நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.

குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.

நல்ல கூரான நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.

கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது
நேராகவும் இருக்குமாறு வெட்டவும்.

நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.
+

பட வாய்ப்பு கிடைக்காததால் ஓட்டலில் வேலை பார்த்த ராஜீவ்...!



குணசித்திர நடிகர் ராஜீவ், நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். ஆனால், நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், சிறிது காலம் ஓட்டலில் வேலை பார்த்தார்.

நடிகர் ராஜீவின் சொந்த ஊர் மதுரை. தந்தை சி.பாலசுப்பிரமணிய முதலியார். தொலைபேசித்துறையில் பணிபுரிந்தார். தாயார் ராஜேஸ்வரி அம்மாள். ராஜீவின் இயற்பெயர் ராஜசேகர்.

சிறுவயதிலேயே நடனத்திலும், பாடல் பாடுவதிலும் திறமை கொண்டவராக ராஜீவ் விளங்கினார். "பி.ï.சி'' வரை பெங்களூரில் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார். அந்தப்பள்ளியில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சியில் "இலந்த பழம், இலந்த பழம்'' என்ற பாடலை பெண் குரலில் பாடி பரிசு பெற்றார்.

பள்ளிப்படிப்பை முடித்த ராஜீவ் நடிகராக வேண்டும் என்ற ஆசையால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடிப்பு பயிற்சி எடுக்க முடிவு செய்தார். அதற்காக விண்ணப்பம் அனுப்பினார்.

ஆனால் "கூத்தாடி பிழைப்பு தேவை இல்லை'' என்று கூறி ராஜீவை அவரது தந்தை உதைத்தார். "சகோதரர்கள் அனைவரும் நன்றாக படித்து இருக்கிறார்களே, நீயும் நன்றாக படி'' என்று கூறிப்பார்த்தார். ஆனால் ராஜீவ் பிடிவாதமாக இருந்ததால் நடிப்பு பயிற்சி பெற சம்மதம் தெரிவித்தார்.

நடிப்பு பயிற்சிக்கு வாய்ப்பு பெற பட்டபாடு பற்றி நடிகர் ராஜீவ் கூறியதாவது:-

திரைப்பட பயிற்சிக்கு 50 ஆயிரம்பேர் விண்ணப்பம் அனுப்பினார்கள். அதில் 500 பேரை வரவழைத்து 50 பேரை தேர்வு செய்தனர். அதில் நானும் ஒருவன்.

என்னை அவர்கள் தேர்வு செய்வதற்குள் நான் பட்டபாடு கொஞ்சமல்ல. இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதர், திருலோகசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்து இருக்க, நான் நேர்காணலுக்கு சென்றேன்.

நான் சென்றதும் எனது பைலை வாங்கிப் பார்த்து விட்டு, தூக்கி எறிந்தார்கள். "படிப்பதை விட்டுவிட்டு, எதற்காக சினிமாவுக்கு வரஆசைப்படுகிறாய்? பணம், கார் என ஜாலியாக இருக்கலாம் என்றா'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான் "சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்து இருக்கிறேன். எனக்கு சிறுவயது முதலே நடிக்கவேண்டும் என்று ஆசை!'' என்றேன்.

உடனே நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் சிவாஜி போல நடித்துக்காட்டினேன். "அப்படியல்ல; உன் ஸ்டைலில் நடி'' என்று கூறினார்கள். நடித்தேன். "உன் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் இப்படி எல்லாம் கடுமையாக நடந்து கொண்டோம்'' என்று பிறகு கூறினார்கள்.

2-ம் ஆண்டு படித்து முடிக்கும்போது, எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து விட்டது. அதன் பிறகு உடல் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டேன். எனவே, "சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'' என்ற பயம் ஏற்பட்டது.

படித்துக்கொண்டு இருக்கும்போது, ஒவ்வொரு வாரமும் ஒரு நடிகரை அழைப்பார்கள். அவர்கள் முன்பு நாங்கள் நடிக்கவேண்டும். அப்படி நடித்தபோது, செல்வம் என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில், "இவர் காமெடி நடிகனாக வருவார்'' என்று என்னைப்பற்றி எழுதினார். அதை பார்த்து நான் அழுதுவிட்டேன். நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தபோது, காமெடி நடிகன் என்று கூறியதை என்னால் தாங்க முடியவில்லை.

இவ்வாறு ராஜீவ் கூறினார்.

நடிப்பு பயிற்சி முடிந்ததும், நடிக்க வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக ஏறி இறங்கினார். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் வெயிட்டராக வேலைக்கு சேர்ந்தார்.

மூன்றரை ஆண்டுகள் அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு, சமையல்கலை பயிற்சி பெற்றார்.

ஒரு நாள் அங்கு நடந்த ஆண்டுவிழாவில் நடனமாடி முதல் பரிசை பெற்றார். அப்போது அங்கு வேலைபார்ப்பவர்கள் ராஜீவிடம் "சினிமா துறைக்கு சென்றால், மிகவும் பிரகாசிக்கலாம்'' என்று கூறி ஊக்கம் அளித்தனர்.
+

’வழக்கு எண் 18/9’ பட்டறையிலிருந்து இன்னொரு படம்..!



பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களில் உதவியளராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கும் படம் ’13’. இந்தப் படத்தில் மனோஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரா என்ற புதுமுகம் நடிக்கிறார்.


ஷீராவின் பெண் குழந்தைகளாக சதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரு குழந்தைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக டி.செந்தில், ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ சார்பாக ஆர்.கே.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.


பாலாஜி சக்திவேலின் சினிமா பட்டறையிலிருந்து வெளியே வந்து படம் இயக்கும் முதல் மாணவராம் சுரேஷ்! ‘‘ பொதுவாக ‘13’ ன்னாலே அதிர்ஷ்டம் இல்லாத நம்பர்னு சொல்லுவாங்க.


ஆனா இந்த கதையோட திருப்பமே 13-ங்கிற தேதியில நடக்கிற ஒரு மகிழ்ச்சியான, லக்கியான விஷயத்திலிருநந்து ஆரம்பிக்கிற மாதிரி இருக்கிறதால படத்திற்கு ‘13’ன்னு டைட்டில் வைத்திருக்கோம்’’ என்கிறார் இயக்குனர் சுரேஷ்!


இந்தப் படத்திற்கு ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசை அமைக்கிறார். எடிட்டிங்கை பகத்சிங் கவனிக்கிறார்.
+

லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்...!



சில சேனல்களை ஓப்பன் பண்ணினால் சித்த வைத்தியர்களின் ஆக்ரமிப்புதான் அதிகமாக உள்ளது. பாட்டி வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறார்கள்.


அதிலும் சிலர் செக்ஸ் சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யும் பிரசாரங்களை சமீபகாலமாக சில படங்களில் காமெடியாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.


அந்த வகையில், சமீபத்தில் வெளியாகிய நவீன சரஸ்வதி சபதம் படத்தில் பரம்பரை சித்த வைத்தியராகத்தான் நடித்திருந்தார் ஜெய். அவரைத் தொடர்ந்து இப்போது பரத்தும் ஒரு படத்தில் பரம்பரை சித்த வைத்தியராக நடிக்கிறார்.


சசி இயக்கிய 555 படத்திற்கு பிறகு தமிழில் பரத் நடிக்கும் அப்படத்துக்கு ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


முந்தைய படங்களுக்காக தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றிய பரத், இப்படத்திற்காக சேனல்களில் தோன்றும் சித்த வைத்தியர்களைப்போன்று தனது பாடிலாங்குவேஜை மாற்றி வருபவர்,


அவர்கள் நோய்களைப் பற்றி எப்படி எப்படி கமெண்ட் கொடுக்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்.


ஆக, ஜெய்யைத் தொடர்ந்து பரத்தும் லேகியம் விற்பனை செய்ய தயாராகி விட்டார்.
+

அடடே அப்டியா..? : பாஸ்ட்புட் கடைக்காரரின் கதையை திருடிய ‘பப்பாளி’ பட டைரக்டர்..!



ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் தொழிலில் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்து திரைப்பட பாடலாசிரியராகும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னை வந்து தள்ளுவண்டிக் கடையில் எச்சில் தட்டு கழுவும் வேலை செய்து, பிறகு பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்து, ஒரு நிலையில் முயன்று இப்போது சொந்தமாக சென்னையில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் பாஸ்ட் புட் கடையை சொந்தமாக ஒரு சிறு ஓட்டல் துவங்கி, அதை நிர்வகித்தபடியே தளராத தனது லட்சிய முயற்சிகளின் விளைவாக…. இப்போது வேடப்பன், திருப்புகழ், சோக்குசுந்தரம், இந்திரசேனா, காட்டுமல்லி ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான்.

ஆனால் இவரது வாழ்க்கையை படமாக எடுக்கும் அதே நேரம் இவரால் பலன் பெற்று இவரையே புறக்கணித்து ஏமாற்றி இருக்கிறாராம் “பப்பாளி” என்ற படத்தை இயக்கும் கோவிந்தமூர்த்தி.

நடந்தது என்ன என்பதை ஜெயங்கொண்டானே சொல்கிறார்….

கோவிந்த மூர்த்தி தனது முதல் படமான ‘கருப்பசாமி குத்தகைக்காரர்’ எடுத்து முடித்த சமயத்தில் எனது கடைக்கு வந்து எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடைக்கு அடிக்கடி வருவார். சொந்த வீட்டில் சாப்பிடுவது போல சாப்பிட்டு விட்டு போவார். அவர் ஒரு வளரும் இயக்குனர் என்ற நிலையில் அப்போது அதை நான் பெருமையாகவே நினைத்தேன். அவர் தனது அடுத்த படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ ஆரம்பித்த சூழ்நிலையில் நான் பாடலாசிரியர் என்பதை அறிந்து என் படத்தில் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். நீங்க நடிக்க கூட செய்யலாம் என்றார். மகிழ்ந்தேன் இரவில் என் கடைக்கு வந்து மணிக்கணக்கில் இருந்துவிட்டு ‘உற்சாகமாக’ கிளம்பிப் போகும் அவருக்கு சிறு செலவும் இருக்காது.

கடையில் அவர் இருக்கும் போது எனக்கு கடன் கொடுத்த பலருடைய அழுத்தங்களுக்கும் நான் ஆளாவேன். அப்போது கூட அவருக்கு ஒரு சிறு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இந்த நிலையில் ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தராதபோதும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. அவருக்கு பாடலாசிரியர் விஷயத்தில் ஏதாவது நிர்பந்தம் இருக்கலாம். அடுத்த படத்தில் தருவார் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அடுத்து அவர் கொஞ்சநாள் படம் இல்லாமல் இருந்தபோது, அவருக்கு நான் வழக்கம் போலவே உதவிகள் செய்தேன். இந்த நிலையில் என் குடும்பம் வாழ்க்கை தொழில் பற்றி அடிக்கடி என்னிடம் பேசினார். தள்ளுவண்டி கடை அனுபவங்கள், வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் நான் பட்ட கஷ்டங்கள், மற்ற பிரச்சினைகளை சமாளிப்பது என்று…நான் என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.

ஒரு நிலையில் அவர் பேசப்பேச, அவர் எனது வாழ்க்கையை அப்படியே கதையாக எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பது புரிந்தது. நானும் அவரும் அதை பலமுறை விவாதிப்போம். நான் பல காட்சிகளாகவும் சொன்னேன். இன்னிக்கு நம்ம நாலு பேருக்கு வணக்கம் வச்சா, நமக்கு நானூறு பேர் வணக்கம் வைப்பாங்க என்பது உட்பட பல வசனங்களையும் சொன்னேன். ஒரு முறை அவர் என்னிடம் நீங்க ஏன் சரவணபவன் முதலாளி மாதிரி ஆவதை லட்சியமாக கொள்ளக்கூடாது. என்று கேட்டார். அதுதான் என் லட்சியம் என்றால் நான் ஊரிலேயே இருந்திருப்பேன். அதை போகிற போக்கில் செய்திருப்பேன்.

படித்து கலெக்டராகவும் ஆகி இருப்பேன். அது மட்டுமல்ல…. ஒரு தள்ளுவண்டிக் கடைக்காரன் கலெக்டர் ஆகா முடியாதா? என்றேன். அன்று அவர் முகத்தில் பூரண திருப்தி. அடுத்த சில நாட்கள் அவர் கடைக்கு வரவில்லை. அவர் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்து விட்டார் என்று தகவல் மட்டும் வந்தது. அப்பறம் என் கடைக்கு வரவே இல்லை. நான் போன் செய்தபோதும் எடுக்கவே இல்லை. நான் பாடல் எழுதும் திறமையை பலமுறை பாராட்டி இருக்கும் அவரிடம் ஒரே ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பலமுறை அவர் ஆபீசுக்கு நடையாய் நடந்தேன். ஒருமுறை கூட அவர் என்னை சந்திக்கவே இல்லை. பலமணி நேரம் உக்கார வைத்துவிட்டு பார்க்க நேரமில்லை என்று தகவல் சொல்லி அனுப்பி விடுவார். நான் நொந்து போனேன். நான் அவருக்கு செய்த உதவிகளை உடன் அனுபவித்த அவரது உதவியாளர்கள் சிலரே, அவர் என்னை புறக்கணிப்பதை சொல்லி மனசாட்சியோடு மிகவும் வருந்தினார்கள். சரி மனிதர் மாறி விட்டார் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் அண்மையில் ‘பப்பாளி’ படத்தின் கதை என்று அவர் கொடுத்த பேட்டிகளில் ஒரு தள்ளு வண்டி கடைக்காரன் ஐ.ஏ.எஸ். ஆவதுதான் படத்தின் கதை என்று சொல்லி இருக்கிறார். விசாரித்த போது படத்தில் எனது காட்சிகள் நான் சொன்ன வசனங்கள். தொழிலில் எனது மேனரிசம் எல்லாம் இருப்பதாக சொல்கிறார்கள். எனது இந்த 31 வயதுக்குள் எனது வாழ்க்கை படமாவதும் அதில் நான் சொன்ன வசனங்கள் இடம் பெறுவதும் மகிழ்ச்சிதான்.

ஆனால் என்னை வைத்து கதை செய்து இருக்கும் இயக்குனர் கோவிந்த மூர்த்தி அவரே வாக்களித்த படி பாடலாசிரியரான எனக்கு ஒரே ஒரு பாடலாவது கொடுத்து இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு முறை சந்தித்து என்னை ஒரு பாட்டு எழுதச்சொல்லி அதன்பிறகு பாட்டு நான் எதிர்பார்க்கும்படி இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்.

ஒருவேளை கவிஞர் யுகபாரதிக்கு எல்லாப் பாடல்களையும் தர வேண்டும் என்று அவர் முடிவு செய்து இருந்தால், அவரே முன்பு சொல்லியபடி, என் கதையில் உருவாகும் படத்தில் எனக்கு நடிக்க ஒரு சின்ன கேரக்டராவது தந்திருக்கலாம். அதற்கும் விருப்பமில்லையா..? என்னை ஒரு முறை சந்தித்து எப்படி இருக்கீங்க..? என்று ஒரு வார்த்தையாவது நட்போடு கேட்டிருக்கலாம்.
என்னை முற்றிலுமாக புறக்கணித்தது தான் என்னால் தாங்க முடியவில்லை.

சினிமா என்பது டீம் வொர்க். இங்கே நட்புதான் ஜெயிக்கும் என்கிறார்கள். நான் அவருக்கு கை கொடுத்து எவ்வளவோ உதவியிருக்க, அவர் எனக்கு கைகொடுத்தால் என்ன குறைந்து விடுவார்? ஒருவருக்கு ஒருவர் உதவி இரண்டு பேருமே முன்னேறுவது தப்பா? என்று கலக்கத்தோடு கேட்கிறார் ஜெயங்கொண்டான்.
+

Friday 21 March 2014

சந்தானத்தின் அந்தர் பல்டி...கலகல பேட்டி...!



என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ.


இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா. தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல இருந்த எனக்குப் புரிஞ்சது!”-ஆர்ம்ஸ் ஏற்றி, பாலீஷ் கூட்டி பளபளக்கிறார் சந்தானம்.


100 படங்களில் காமெடியன் என்ற மைல்கல்லுக்குப் பிறகு, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார்.


”ஆர்யா, அப்படிச் சொன்னார். மத்தவங்கள்லாம் என்ன சொன்னாங்க?”


”சிம்பு, ‘என்ன ஹீரோ… என்ன பண்றீங்க?’னு விசாரிச்சார். ‘அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ன்னேன். ‘ஏன்… என்னாச்சு?’னு கேட்டார். ‘நான் ஹீரோவா நடிக்கிறதுக்குள்ள வி.டி.வி.கணேஷ் எல்லாம் ஹீரோ ஆகிட்டார். ‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. அதனால நீங்க ‘சந்தானம்னே கூப்பிடுங்க’ன்னேன். சிம்பு லைனை கட் பண்ணதும் பக்கத்துல இருந்த கணேஷ்,


‘ஏண்டா அவரு உனக்கு போன் பண்ணார்னா, ஊர் உலகத்தைப் பத்தி ஏதாச்சும் பேசுங்க. என்னை ஏண்டா ஊறுகாய் ஆக்குறீங்க?’னு காண்டானார். ‘ஹீரோவா நடிக்கிற. முடி எல்லாம் கரெக்டா இருக்கா. மார்க்கெட்ல ஏகப்பட்ட புது விக் வந்திருக்கு. சாம்பிள் பார்த்தியா?’னு மெசேஜ் பண்ணார் ஜீவா. ‘நானும் யூத்தான்யா…’னு ரிப்ளை பண்ணேன். இப்படி… பல போட்டி பொறாமைகளுக்கு மத்தியில்தான் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு!”


”காமெடிப் பயணம் தெளிவாப் போயிட்டு இருக்கிறப்ப, ஏன் இந்தத் திடீர் திருப்பம்?”


”பழைய பல்லவிதான். ஆனா, இது, இந்தக் கதைக்காக எடுத்த முடிவு. இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவா நடிக்க முடியும். ஏன்னா, அப்பாவியாவும் இருக்கணும்; அப்ளாஸும் அள்ளணும். அப்போ ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவால இதைப் பண்ண முடியாது. புதுமுகமும் தாங்க மாட்டார். ஆக, எனக்கான சப்ஜெக்ட்டாத் தோணுச்சு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

மத்த படங்களைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா காமெடி, பளிச் பன்ச் மட்டும் சேர்த்துட்டு நான் ஹீரோ ஆகலை. ‘நான் எது பண்ணாலும் தியேட்டர்ல கைதட்டுவாங்க’னும் நினைக்கலை. ஸ்க்ரிப்ட்ல ஆரம்பிச்சு என் ஸ்கின்டோன் வரைக்கும் சிறிசும் பெருசுமா நிறைய சுவாரஸ்யம் சேர்த்திருக்கோம்.


படத்துல டான்ஸ், சேஸிங், ரன்னிங்னு நிறைய இருக்கு. திடீர்னு ஒருநாள் கொஞ்ச தூரம் ஓடிட்டு, ‘கால் பிடிக்குது, தொடை பிடிக்குது’னு உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நடிச்சா, ரெண்டு வருஷமாகும் படத்தை முடிக்க! அதுவும் போக, ‘வயித்தைப் பாரு தலகாணி மாதிரி வெச்சிருக்கான்’னு நாமளே பலரை ஓட்டியிருக்கோம். இப்போ நாமளும் அப்படி வந்து நின்னா, எல்லாரும் சிரிப்பாங்கள்ல. அதனால ஜிம் ஓட்டம், டான்ஸ் ஆட்டம்னு எல்லா ஏரியாலயும் பட்டி, டிங்கரிங் பார்த்துட்டுத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சாமாவது ‘ஹீரோ லுக்’ வருதுல்ல!”


”வருது… வருது… ஆனா, அது மட்டும் போதுமா?”

”எவ்வளவோ யோசிக்கிறோம்… அதை யோசிக்க மாட்டோமா? ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’-வில் பவர்ஸ்டார் மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சர்ப்ரைஸ் மேஜிக் வெச்சிருக்கோம். ஆனா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்!”

”இப்பவே சொல்லுங்க…!” என்று அழுத்திக் கேட்டதும்…

” ‘லட்டுக்கு ஒரு பவர்ஸ்டார்’னா ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ல ஒரு சோலார்ஸ்டார். ஆமா ப்ரோ… நம்ம ராஜகுமாரன் சார், படத்துல பிரமாதமான ஒரு கேரக்டர் பண்றார். ‘காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப. கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா?’னு என்கிட்ட கேட்பார். ‘பார்த்ததில்லை’ம்பேன். ‘இதுல நீ பார்ப்ப’னு சொல்வார். இது ஒரு டீஸர்தான். இப்படி படம் முழுக்க அவரோட அழும்பு தூள் பறக்கும்!


படத்தோட இயக்குநர் ஸ்ரீநாத், என் நண்பன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல நடிக்கும்போதே, ‘நீ, நான், பிரேம்ஜி மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் மச்சான். நான்தான் டைரக்ஷன்’னு சொல்லிட்டு இருப்பான். அவனுக்கு டைரக்ஷன்தான் ஆர்வம். ஆனா, நடிக்கும் வாய்ப்புதான் வந்துச்சு. இப்போ அவன் திறமையை நிரூபிக்கிற மாதிரி இந்தப் படம் அமைஞ்சிருக்கு!”


”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”


”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன். கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே


கிடைக்கலையாம்’னு சொன்னேன். பட்டுனு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்! சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு. ஆனா,


அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரை பேசினதே இல்லை. இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவாப் பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்
+

ஆத்திரமடைந்த தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸ் சென்று சமாதானப்படுத்திய தமன்னா



அஜீத், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் Veerudokkade என்ற படம் ஆந்திராவில் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்காக அதிகளவில் தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மேலும் இந்த படத்தை குறித்து சில நாட்களுக்கு முன் எழுந்த ஒரு கிசுகிசு தமன்னாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Veerudokkade படத்தின் தெலுங்கு டப்பிங் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு தமன்னாவை தயாரிப்பு தரப்பு அழைத்தபோது, தனக்கு ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே வரமுடியும் என்று டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் கடும் கோபம் அடைந்த அந்த தயாரிப்பாளர். உடனடியாக தயாரிப்பு சங்கத்தை கூட்டி, தமன்னாவை இனிமேல் எந்த தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தடை போட்டாராம்.


அந்த தயாரிப்பாளர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் உடனே அவருக்கு பேச்சுக்கு கட்டுப்படு இனி தங்கள் படங்களில் தமன்னாவை புக் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமன்னா அதிர்ச்சியாகி, பின்னர் தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று அவரை மணிக்கணிக்க்கில் தனிமையில் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. தமன்னாவில் சமாதானத்தில் திருப்தி அடைந்த தயாரிப்பாளர் தற்போது தடையை நீக்கிவிட்டார் என கூறப்படுகிறது.
+

யாசகன் - திரை விமர்சனம்…!




மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.

மகேஷ் ஒரு நாள் வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அங்கு புதியதாக திருமணம் ஆன மகேஷின் நண்பரும் வேலை தேடி வருகிறார். மகேஷ் வேலையை விட்டுக் கொடுத்தால் தான் நண்பருக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இந்த மாதிரி பல தியாகங்களை செய்து வருகிறார் மகேஷ்.இதற்கிடையில் மகேஷ் அப்பாவின் குடும்ப நண்பரின் மகளான நாயகி நிரஞ்சனா, மகேஷையே சுற்றி சுற்றி வருகிறார். முதலில் கண்டுக்கொள்ளாத மகேஷ், பிறகு நிரஞ்சனா காதலை சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார்.ஒருநாள் மகேஷின் வீட்டு அருகில் இருக்கும் ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இதைக் கண்ட மகேஷ் அவர்களை பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள். நிறைய பணம் தேவை என்பதால் மனம் வருந்துகிறார் சிறுமியின் தாயார். இவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லுகிறார் மகேஷ்.

சிறுமியை காப்பாற்றுவதற்காக தன் சகோதரியான ஜானவியிடம் பணம் கேட்கிறார். அதற்கு ஜானவி பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு தான் உதவி செய்த அனைவரிடமும் சென்று பணம் கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக ஏற்கனவே தான் உதவி செய்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்கிறார். அவரும் பணம் தர மறுக்க மனமுடைந்து அங்கிருந்து செல்கிறார். மகேஷ் பணத்தை கேட்டவரிடம் இருந்த பணம் திடீரென காணாமல் போக, இதற்கு காரணம் மகேஷ் தான் என்று போலீசில் புகார் செய்கிறார் அவர். இதனால் போலீஸ் மகேஷை கைது செய்கிறது.

ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் மகேஷ் வெளியே வருகிறார்.வெளியில் வரும் மகேஷ், சிறுமி வீட்டிற்குச் சென்று பார்த்தால் சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் மனமுடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் மகேஷ். இதற்கிடையில் நிரஞ்சனாவின் அப்பாவிற்கு பணி இடம் மாற்றம் ஆகி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.மகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் குடும்பத்தினர் வெறுக்கின்றனர். இறுதியில் மகேசின் மனநிலை சரியானதா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

‘அங்காடித் தெரு’ வில் நடித்த மகேஷ், அந்தப் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான். ஆனால், அது வலுவாக இல்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சோர்வாகவே வருகிறார். கேரளத்து வரவான நாயகி நிரஞ்சனா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷின் அக்காவாக வரும் ஜானவி, நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 2 பாடல்கள் அருமை. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.

மதுரையில் நடத்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள துரைவாணன், கதாபாத்திர தேர்விலும், கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகளை ஒருங்கினைப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘யாசகன்’ – தனி ஒரு மனிதனின் போராட்டம்….
+

அமரன் - திரைவிமர்சனம்...!



மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ அமரன், நண்பர்களின் அவமானத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறிக்கடையில் வேலை செய்கிறார். அங்கு காய்கறி வாங்க வந்த போலிஸாருடன் சண்டை போடுவதோடு, போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார்.

இதனால் பயந்து போன அமரனின் அத்தை, அமரனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்.சென்னைக்கு செல்லும் ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கும் அமரன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ திடீரென மயக்கமாகி விழுந்துவிடுகிறார். சோனுவை அமரன் காப்பாற்றுகிறார். நினைவு திரும்பிய சோனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சோனுவும், அவரது காதலனும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்ய இந்த ரயிலில் ஏறியதாகவும், யாரோ மயக்க பிஸ்கட் கொடுத்து தன்னை மயக்கிவிட்டு, காதலனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டாதாகவும் கூறுகிறார். சோனுவின் காதலனுடன் சேர்த்து வைக்க அமரன் முயற்சிக்கும்போது தான் காதலனை சோனுவின் தந்தையே கொன்று விட்டார் என்றும், சோனுவையும், அமரனையும் கொலை செய்ய தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்தும் அமரனை பழிவாங்க துடிக்கிறார். வில்லன்களிடம் இருந்து அமரன் – சோனு தப்பித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் படு சொதப்பல் அதைவிட கேரக்டரகளை புரிந்து கொள்ளாமலே நடிக்கும் நடிகர்களை வைத்து இயக்குனர் ஜீவன் எப்படித்தான் படத்தை இயக்கினாரோ தெரியவில்லை.இந்த படத்தை ஒரு நல்ல நடிகர், நடிகையை வைத்து எடுத்திருந்தால் கண்டிப்பாக ஹிட்படம் இது.

படத்தை பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்தால் ஏதாவது டிவியில் போடுவார்கள். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத படம்.
+

குக்கூ - திரைவிமர்சனம் [ குக்கூ... குறிஞ்சிப் பூ..! ]




தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இயக்கம் : ராஜு முருகன்

நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ்

ஒளிப்பதிவு : பி.கே.வர்மா

இசை : சந்தோஷ் நாராயணன்

எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி

பஸ்களிலும், ரயில்களிலும் நாம் பயணிக்கும்போது எத்தனையோ பார்வையற்றோரைக் கடந்து வந்திருப்போம். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள்! ஆனால், அவர்களுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அவர்களுக்கும் பார்வை இருக்கிறது, ரசனை இருக்கிறது, அன்பு இருக்கிறது, கோபம் இருக்கிறது, காதல் இருக்கிறது என்பதை பறைசாற்ற வந்திருக்கும் படமே ‘குக்கூ’.

கதைக்களம்

இதயத்தில் ஆரம்பித்து இதயத்திலேயே தங்கிவிடும் பேரன்பின் ஓசைதான் ‘குக்கூ’வின் மையக்கதை.

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் (உணரும்) ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொருவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். முடிவில் தமிழ் - சுதந்திரக் கொடியின் தெய்வீகக் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே ‘குக்கூ’.

படம் பற்றிய அலசல்

நல்ல படங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட தற்போதைய பிசினஸ் சினிமா உலகத்தில், வியாபாரத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் முதல் படம் என்பது ஒரு இயக்குனருக்கு அவரின் சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஜெயிக்கும் குதிரையின் மேல்தான் இங்கே பந்தயம் கட்டுவார்கள். ஆனால், எழுத்தாளராக எப்படி சிறந்த படைப்புகளை ராஜு முருகன் வழங்கினாரோ அதைப்போலவே தன் முதல் படத்தையும் தரமானதாக தர முயன்றிருக்கிறார். நல்ல இயக்குனர்கள் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம் ரெடி ராஜு முருகன்... வாழ்த்துக்கள்!

தமிழ்சினிமாவில் ஏற்கெனவே பார்வையற்றோரைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலெல்லாம் மைய கதாபாத்திரம் மட்டுமே பார்வையற்றதாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘குக்கூ’ முழுக்க முழுக்க பார்வையற்றவர்களின் ஒரு தனி உலகத்தையே படம் முழுவதும் காட்டியிருக்கிறது.

முதல் பாதியில் காமெடி, காதல், பாசம் என மெதுவாக பயணிக்க வைத்து, இடைவேளையில் நெஞ்சை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தந்தாலும், போரடிக்காத இரண்டாம் பாதியும், நெகிழ வைக்கும் க்ளைமேக்ஸுமாக ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைப் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான். தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கோ என்ற உணர்வு ஏற்படாதவாறு பார்த்திருந்தால் தினேஷும் அடடே அற்புதமப்பா!

ஆனால், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் என்றால், அது தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கேரக்டரில் நடித்தவர்தான்.

முதல் பாதி முழுக்க நம்மை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இவர்தான்! தினேஷின் இன்னொரு நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த சர்ப்ரைஸ் திரையில்!

பலம்

* இதுவரை பார்த்திராத ஒரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற கதைக்களம்.

* கதாபாத்திரத் தேர்வும், அற்புதமான நடிப்பும்!

* படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ‘நச்’ வசனங்கள். உதாரணத்திற்கு.... ‘கண் இருக்கிற ஆம்பளை எங்கயும் இருக்கான்... மனசு இருக்கிற ஆம்பளை எங்கயாவதுதான் கிடைப்பான்’, ‘விட்டுட்டு போயிடுவியா?ன்னு கேட்டா... யாராவது உசுர விடுவாங்களா?’, ‘பொம்பளைங்களை திட்டுறதே ஒரு ஃபேஷனா வச்சுருக்கிங்களாடா?’ என அடுக்கிக் கொண்டே போகலாம்.

* உறுத்தாத ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணி இசையும், பாடல்களும். குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றும் படத்தோடு பார்க்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கிறது. அற்புதம்!

பலவீனம்

* ரொம்பவும் மெதுவாக நகரும் திரைக்கதை.

* பார்வையற்றவர்களின் மேல் பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட சில காட்சிகள்.

* இன்னும் கொஞ்ச இடங்களில் கத்திரியை வைத்திருக்க வேண்டிய எடிட்டிங்!

* வாய்ப்பிருந்தும் கொஞ்சம் முன்கூட்டியே வைக்கப்படாத க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்...

பொழுதுபோக்குவதற்காக எவ்வளவோ படங்கள் வாராவாரம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட படங்களை நாம் வரவேற்பதன் மூலமே மீண்டும் அதை உயிர்பெறச் செய்ய முடியும். பார்வையற்றவர்களோடு நெருங்கிப் பயணிக்க ஒரு உன்னத வாய்ப்பு இந்த ‘குக்கூ’!

ஒரு வரி பஞ்ச் : குக்கூ... குறிஞ்சிப் பூ!
+

Thursday 20 March 2014

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!



ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 
+

ஜெயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்...!



எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974ல் உருவான ‘அன்புத் தங்கை’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் ஜெயலலிதாவுடன் புத்த பிஷு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு.


ஜெயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சூப்பர் ஹிட் படம் ‘அவள் ஒரு தொடர்கதை’. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் ஜெய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜாதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.


ஜெமினி கணேசன் தயாரித்த ‘நான் அவன் இல்லை’ படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை. ஆனால், இதே படம் ஜீவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பூச்சாண¢டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன். அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் ‘தங்கப் பதக்கம்’. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜி முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜி நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.


‘அன்றே சிந்திய ரத்தம்’ படத்தில் எம்ஜிஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் ஷூட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது ‘உரிமைக் குரல்’. எம்ஜிஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த படம் ‘நேற்று இன்று நாளை’. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார்.


இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘சீதா அவுர் கீதா’. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பாணி கதைதான். அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் ‘வாணி ராணி’ என்றும் தெலுங்கில் ‘கங்கா மங்கா’ என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜி நடித்தார். வாணிஸ்ரீ டபுள் ரோலில் நடித்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத¢தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.

1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜினல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே இப்போது அதே படத்தை ‘குமாஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார்.

அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர். கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். ஜெயலலிதாவின் 100வது படம் ‘திருமாங்கல்யம்’. கேமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.

மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் ‘டைகர் சாத்தாச்சாரி’, அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே ஹீரோ. கவிஞர் வாலியின் மேடை நாடகமான ‘கலியுக கண்ணன்’, படமானது. கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் ஜெய்சங்கருடன் ஜெயசித்ரா நடித்திருந்தார்.

 அசோகனும் வாசுவும் ஹீரோவாக நடித்த படம் ‘வைரம்’. இந்தியில் வெளியான ‘விக்டோரியா 203’ படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். ஜெய்சங்கர், ஜெயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.ஜெயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர். தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சூப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் ‘ஜன்ஜீர்’. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா ஹீரோயின்.
+

சிவகார்த்திகேயனை வலம் வரும் முன்னனி நடிகைகள்...!



வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.


சமீபத்தில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது.


தற்போது சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் 'டாணா' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


'டாணா' படம் முடிந்ததும் 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+

சமுத்திரகனியின் மகளாக நடிக்கும் அமலா பால்!



நிமிர்ந்து நில் படத்துக்குப் பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி காடு சார்ந்த இடத்தைக் களமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இதில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


 இப்படத்தில் அமலா பால் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இளம் பெண்ணாகவும், 40வயது கடந்த பெண்ணாகவும் நடிக்க இருக்கிறார்.


சமுத்திரகனியின் மனைவியாகவும் மகளாகவும் அமலா பால் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இரண்டு ஜெயம் ரவியும் சண்டைப் போடுவது போல பல சவாலான காட்சிகள் அதில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மைனா படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று படங்கள் நடிப்பதில் பிஸியாகவே இருந்தார் அமலா பால். ஆனால் இப்போது தமிழில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படமும் மலையாளத்தில் லைலா ஓ லைலா படமும் வெளிவர இருக்கிறது.


அதன் பிறகு அமலா பாலிடம் இருக்கும் ஒரே ஒரு திரைப்படம் சமுத்திரகனியின் திரைப்படம் மட்டுமே. இதில் தன் அசர வைக்கும் நடிப்பால் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என நம்புகிறார்கள் அமலா பாலின் ரசிகர்கள்.
+

நாளை 5 தமிழ் படங்கள் ரிலீஸ்!



கடந்த வாரம், வெள்ளிக் கிழமை 6 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படங்களில் ஒரு படத்திற்குக் கூட சொல்லும் படியாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை!


கடந்த வாரம் 6 படங்கள் வெளியாகின என்றால் இந்த வாரம், அதாவது நாளை 5 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது!


இந்த 5 படங்களும் பெரிய பட்ஜெட்டோ, பெரிய நடிகர்களோ இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாகும்! அந்த ஐந்து படங்களில் டிரைலர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிற படம் அறிமுக இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ’குக்கூ’.


இந்தப் படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்க, மாளவிகா நாயர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை ரிலீசாகிறது.


‘தேனீர் விடுதி’யை இயக்கிய எஸ்.எஸ். குமரனின் அடுத்த படமான ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படமும் நாளை ரிலீசாகிறது.


இந்தப் படமும் ரசிகர்களிடத்தில் பரவலான எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும்! சென்ற வாரம் வெளியான ‘ஆதியும் அந்தமும்’ படத்தை இயக்கிய கௌசிக் இயக்கியிருக்கும் மற்றொரு படம் ‘பனி விழும் நிலவு’.


ஹிருதய், எடன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படமும் நாளை வெளியாகிறது. ஒரு இயக்குனரின் 2 படங்கள் ஒரு வார இடைவெளியில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களுடன் துரைவாணன் இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’யாசகன்’,


குமார். டி. இயக்கியிருக்கும் ‘விரட்டு’ என மொத்தம் 5 படங்கள் நாளை ரிலீசாக, இந்தப் படங்களில் எந்தெந்த படங்கள் ஜெயிக்கும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!
+

சந்தானத்துடன் இணையும் ராஜகுமாரன்!



’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து கலக்கியவர் சந்தானம்.


இவர் மீண்டும் அதே போன்ற காமெடி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.


‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சந்தானத்துடன் கை கோர்த்து காமெடியில் கலக்கியவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்!


இவர் ஏற்று நடித்தது மாதிரியான ஒரு கேரக்டர் இப்படத்திலும் உண்டு!


அந்த கேரக்டரில் 100 நாட்கள் ஓ(ட்)டிய ‘திருமதி தமிழ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் நடிக்கிறார்!


இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஈரம்’, ‘வேட்டைக்காரன்’ உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார்.


கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடிக்க, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.
+

கன்னடாவில் உத்தம வில்லன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு...!



ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் என். லிங்குசாமி இணைந்து தயாரிக்கும் உத்தம வில்லன் திரைப்படம் கமல் நடிப்பில் வெளிவர உள்ளது.


ஃபர்ஸ்ட் லுக்கினால் வெளிவந்த வதந்தியை எதிர்கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் ஆரம்பித்துள்ளது.


முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் முடிவடைந்த பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கன்னடாவில் ஷூட் செய்ய திட்டமிட்டிருந்தனர்.


ஆனால் தற்போது கன்னடாவில் படப“பிடிப்பிற்கு சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.


கமலஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் மற்றும் முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் கே. பாலசந்தர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.


மேலும் ஆண்டிரியாவின் படப்பிடிப்பு பெங்களூரில் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் எடுக்க உள்ளனர்.
+

Wednesday 19 March 2014

வரலஷ்மி சரத்குமாரின் அதிரடி முடிவின் பின்னனி...!



போட போடி படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலஷ்மி சரத்குமார்.


அப்படத்திலே நடனத்தின் மூலம் அவரது திறமையை வெளிப்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.


வரலஷ்மியிடம் அடுத்த படம் எதுவும் நடிக்கவில்லையா என கேட்டபொழுது எனக்கு படம் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,எந்த கட்டாயமும் இல்லை என தெரிவித்திருந்தார்.


மேலும் எனக்கு படம் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார் வரலஷ்மி சரத்குமார்.


ஆனால் வரலஷ்மி பாலாவின் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்  என அண்மையில் தகவல் வெளிவந்துள்ளது .
+

காளி அவதாரம் எடுத்த கார்த்தி...!



சிறுத்தை படத்திற்கு பிறகு கடந்த வருடத்தில் நடித்த மூன்று படங்களுமே கார்த்திக்கிற்கு படு தோல்வியை தந்திருந்தது.


பல படங்களின் தோல்விக்கு பிறகு மீண்டும் தலை தூக்கிய கார்த்தி தற்போது அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்தின் காளி என்ற படத்தில் நடிக்கிறார்.


70 நாட்கள் பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர் மற்றும் வட சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர் படக்குழுவினர்.


இப்படத்திற்கு நல்ல ஐந்து பாடல்களை தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஏப்ரல் மாதம் கடைசிக்குள்ளும், படம் மே அல்லது ஜூன் மாதம் கடைசிக்குள்ளும்  வெளியிட முடிவு செய்துள்ளனர்.


மேலும் இப்படத்திற்கு பிறகு சசிகுமாரை வைத்து குட்டிப்புலி திரைப்படம் இயக்கிய முத்தையாவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்திக், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கபடாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+

இதுக்குப் பேர் தாங்க ரகசிய சிகிச்சை...! யார் கிட்டயும் சொல்லாதிங்க...!



லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்து வருகிறாராம் சமந்தா.


நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. ஆனால் தோல் பாதிக்கப்பட்ட அவர் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார்.


சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.


அஞ்சான் படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது மீண்டும் தோல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றார்.


சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் ஷூட்டிங்கில் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் பறந்தார்.


அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அவர் ரகசிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
+

கரகாட்டகாரனின் மறுபொயர் நான் ‘தாரை தப்பட்டை’



பாலாவின் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


'பரதேசி' படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடி போடவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.


இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் 1000வது படமாகும்.


இதுவரை தலைப்பிடாத இந்தப் படத்திற்கு இப்போது 'தாரை தப்பட்டை' என தலைப்பு முடிவு செய்துள்ளதாம் பாலா தரப்பு.


ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

+

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு பற்றிய தகவல்கள்...!



கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.கொள்ளின் பலன்கள் கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்னையும் ஏற்படாது.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும்,  கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

வேர்க்கடலை கொழுப்பு அல்ல

வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.

வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம்,

ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.
+

இதுதாங்க சனியன தூக்கி பனியன்ல போட்ட கதை...!



சிவமயமான அந்த திடீர் புகழ் நடிகருக்கும், அவரது நெருங்கிய நண்பராகவும்,


அண்ணனாகவும் இருந்த ஒல்லிப்பிச்சான் நடிகருக்கும் இப்போது அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம்.


சிவனின் அசுர வளர்ச்சி தன் மார்க்கெட்டுக்கே வேட்டு வைப்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்தாராம்.


ஒரு இயக்குனர் சிவனிடம் கதை சொல்லிவிட்டு இது ஒல்லிப்பிச்சானுக்காக எழுதின கதை, உங்களுக்கும் செட்டாகும் இன்றைய டிரண்டுல உங்க படத்துக்குதான் பிசினஸ் இருக்குன்னு சொல்லியிருக்காரு.


இந்த விஷயம் ஒல்லிப்பிச்சான் காதுக்கு போக. வளர்த்த கடா மார்புல பாயுறுதுக்கு முன்னாடியே விலகிக்குவோம்னு முடிவு பண்ணிட்டாராம்.


சிவனை வெறுப்பேத்துறதுக்காகவே வம்பு நடிகரோட ரொம்ப நெருக்கம் காட்டுகிறாராம்.
+

உண்மையை போட்டு உடைத்த ஜெயம் ரவி ...!



சாக்லெட் ஹீரோ இமேஜை உடைக்க போராடுகிறேன் என்றார் ஜெயம் ரவி.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:


பேராண்மை, ஆதி பகவன், நிமிர்ந்து நில் என ஆக்ஷன் படங்களில் நடித்தும் சாக்லெட் ஹீரோ இமேஜ்தான் தொடர்கிறதே என்கிறார்கள். இமேஜ் வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பாவிட்டாலும் அந்த இமேஜ் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.


அதை உடைக்கத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். காதல் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என இரண்டு வகை கதாபாத்திரத்திலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


என்னைப்போல் டபுள் இமேஜ் எந்த ஹீரோவுக்கும் கிடையாது. சாக்லெட் பாய் ஹீரோதானே என்று சமுத்திரக்கனியோ, ஜனநாதனோ, அமீரோ என்னை ஒதுக்காமல் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த வெற்றி.


அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம்போல் இதுவும் காதல் கலந்த குடும்ப கதைதான். என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஜெனிலியாதான்.


 ஈகோவே இல்லாத அவரது குணம் என்னை கவரும். இதனால் மற்ற ஹீரோயின்கள் கோபப்படுவார்கள் என்று பயப்படவில்லை. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
+

வத்திக்குச்சியிலிருந்து குத்தூசிக்கு மாறியிருக்கும் திலீபன்...!



அஞ்சலியோடு ஜோடியா இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.


பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் தற்போது குத்தூசி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


லஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம். தியாகு தயாரிக்க சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவசக்தி, தற்போது குத்தூசி திரைப்படத்தை இயக்கிவருகிறாராம்.


மேலும் இப்படத்தை பற்றி பேசிய திலீபன் வத்திக்குச்சி படத்திற்கு பிறகு நிறைய கதை கேட்டேன் என் மனதிற்கு பிடித்தது போல் அமைந்தது குத்தூசி திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.


பிடிச்சது இருக்கட்டும் திலீபன் நடிச்ச படம் பெயர்கள் வத்திகுச்சி, குத்தூசி எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி பேர் அமையது.
இத நா கேட்கலங்க நம்ம சினிமா வட்டாரம் கேட்கறாங்க.

இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியுமாவார்..
+

இப்படி பேசி,பேசியே பெரிய ஆளா ஆக்கிடுவாங்க...இவங்க...!



எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று .


சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது


இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை .


ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார் நிகழ்ச்சி தான் ஏதோ அங்கு நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு கூட்டம்.


பின்பு தான் தெரிந்தது சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கிறார் என்பதுதான்.


சொந்த ஊரான திருச்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவர்களை இவ்விழாவில் சீன் போடுவதற்காக வண்டி வைத்து இறக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.


கூட்டம் கூட்டமாக தன் சொந்த ஊர் காரர்களையே இறக்கிவிட்டு பாதுகாப்பிற்கு 10 குண்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!!!!!!!!!!!!
+

அடம்பிடித்த சசிகுமாரை அடக்கிய பாலா...!



இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரை தாடியில்லாமல் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதை விட, தாடியில்லாமல் சசிக்குமார் இல்லை என்றே கூறலாம்.


அப்படிப்பட்ட டிரிம் செய்யப்பட்ட அழகான தாடியுடன் இதுவரை தோன்றிவந்த சசிக்குமார், விரைவில் துவங்கவுள்ள பாலா படத்திற்காக தாடியை எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


பெரும்பாலும் கிராமத்து மற்றும் முரட்டுக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சசிக்குமாருக்கு அவரது தாடி ஒருவகையில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.


அதே சமயம் கொஞ்சம் மாடர்ன் ஹீரோவாக இவர் நடித்த பிரம்மன் படத்திலும் கூட இவர் தாடியுடனேயேதான் நடித்திருந்தார். இப்படியாக இவர் இதுவரை கட்டிக்காத்துவந்த தாடியினை பாலாவின் படத்தில் நடிப்பதற்காகத் தியாகம் செய்யவேண்டிவந்துள்ளது.


பெரும்பாலும் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எதேனும் ஒருவகையில் தங்களை வருத்திக் கொண்டே நடித்தாகவேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும் சோகமான அல்லது ஏழ்மையான கதாபாத்திரங்களே பாலாவின் ஹீரோக்களாக இன்றுவரையிலும் இருந்துவந்துள்ளனர்.


பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கவுள்ள திரைப்படம் கரகாட்டக் கலையினை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.


இப்படத்திற்காகத்தான் சசிக்குமார் தாடியை எடுக்கவுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சசிக்குமாரின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கவுள்ளன.
+

சிவகார்த்திக்கேயன்லா ஹீரோவா நடிக்கும் போது நான் ஹீரோவா ஆன தப்பில்லை...!



தனது கானா பாடல்கள் மூலமும், அக்மார்க் சென்னை முகச்சாயல் மூலமும் திடீர் புகழ்பெற்றவர் கானா பாலா.

அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி என்று பாடி வந்தவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

 "என்னைய ஹீரோவோ போட்டு யாராவது படம் எடுங்களேன்" என்று மேடைக்கு மேடை தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தவர் இப்போது நிஜமாகவே ஹீரோவாகிறார்.

விஜய்யின் ஆரம்பகால படங்களான நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா ஆகியவற்றை இயக்கியவர் செல்வபாரதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கப்போகும் படம் பாரீஸ் கார்னர்.

இந்தப் படத்தில்தான் கானா பாலா ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆளாகிவிட்டார்கள். செல்வ செழிப்பில் இருக்கிறார்கள்.

 ஆனால் சென்னையின் பூர்வகுடி மக்கள் இப்போதும் வறுமையில்தான் இருக்கிறார்கள், கூவத்தின் கரையில் வாழ்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் படம்.

அதில் கானா பாலா பாரீஸ் கார்னரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கிறார்.

படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கானா பாட்டுதான், அவரே பாடுகிறார்.
+

நியாயம் கேட்டு வந்த நடிகையை மிரட்டி அனுப்பிய நடிகர்..!



தென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது..

நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து நடந்தபோது நடிகர் சங்கம் நடிகர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.

இந்நிலையில் இதோ இன்னொரு குற்றச்சாட்டு! அண்மையில் இயக்குநர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை மனிஷா யாதவ்.

இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது அந்த சம்பவம் நடந்ததால், சீனு ராமசாமி மீது கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டிருந்தாராம் மனிஷா யாதவ்.

அதோடு, அங்கிருந்தபடியே நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். நடந்த சம்பவங்களை அவரிடம் கேட்ட நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று மனிஷா யாதவை தடுத்துவிட்டாராம்.

அதுமட்டுமல்ல, மனிஷாவை உடனடியாய் சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார்.

நடிகர் சங்கத்தினால் தனக்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் சென்னை வந்த மனிஷா வெறுத்துப்போய்விட்டாராம்.

கொடைக்கானலில் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது, படத்திலிருந்து உன்னை நீக்கியதற்கு நஷ்டஈடாக இரண்டு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்குக் கிளம்பு என்று உத்தரவிட்டாராம் அந்த நிர்வாகி.

படத்தில் பார்ப்பதுபோலவே பயமுறுத்தும்படி அவரது பேச்சு இருந்ததால், உண்மையிலேயே பயந்துபோய் பெங்களூருவுக்குக் கிளம்பிப்போய்விட்டாராம் மனிஷா யாதவ்.
+

தனது முதல் பட இயக்குனருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி..! - வேறவழியில்லையே.....



குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்னர் சில காலம் காணாமல் போன அவரை, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார் பாரதிராஜா. ஆக, அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ரீதேவி.

தென்னிந்திய சினிமாவில் புகழ் கொடி நாட்டியவர், பின்னர் பாலிவுட்டிற்கும் சென்று கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

அதையடுத்து, தன்னை இந்திக்கு அழைத்து சென்ற தயாரிப்பாளர் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டு சிவகாசி ஸ்ரீதேவி மும்பைவாசியாகி விட்டார்.

இப்போது அவருக்கு அர்ஜூன், ஜானவி, குஷி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி.

அப்படத்தில் சவாலான வேடம் என்பதால் சிறப்பாக நடித்து மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஆனால் அடுத்து உடனடியாக படம் கிடைக்காதநிலையில், தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கயிருக்கும், த்ரிஷா இல்லேனா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார்.

இப்படத்தில் தன்னை கதாநாயகியாக்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார்.

கதைப்படி கதாநாயகனின் பெற்றோராக நடிக்கும் இவர்களுக்கும் கதையில் பெரும்பங்கு உள்ளதாம்.

ஆக,. பாண்டியநாடு படத்திற்கு பிறகு பாரதிராஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவியும் மீண்டும் இப்படத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.
+

வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதலா..?



காமெடி நடிகர்களான வடிவேலுவும், சிங்கமுத்துவும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

 நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் 'நாடோடி வம்சம்'.

கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

நாடோடி வம்சத்தைச் சேர்ந்தவரான வாசன் கார்த்திக், இரண்டு தாதாக்களுடன் மோதி நாடோடி வம்சத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிபவராகப் படத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு, காமெடி, செண்டிமெண்ட் காட்சிகளிலும் தூள் பரத்தியிருக்கிறார். நாயகியாக அர்ச்சனா நடித்திருக்கிறார்.

 வாசன் கார்த்திக்குடன் சேர்ந்து இவர் நடித்திருக்கும் ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினரே வியந்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவியரசு ஒளிப்பதிவு செய்ய, மோகன் படத்தொகுப்பு வேலை கவனிக்க, ராஜ்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதுபோலவே, வடிவேலு நடித்துள்ள 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படம் வெளியாகும் தேதியன்றே வாசன் கார்த்திக் நடித்துள்ள படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதன்மூலம் வடிவேலு - சிங்கமுத்து மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
+

ஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்..!



விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார்.


 ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.


 தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார்.


இதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். போலீசாரிடமும் இந்த படத்தை திரையிட்டு காட்டினார்.


இந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் கூறினார். இருபத்தைந்து வருடம் சினிமாவில் இருக்கும் என் மீது பொய் குற்றச்சாட்டு மூலம் அவதூறு ஏற்படுத்தி விட்டனர்.


 இதனால் மனம் மிகவும் காயப்பட்டு விட்டது. இனிமேலும் பாக்யஸ்ரீயை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது எனவே அவருக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

+