Thursday 6 February 2014

Leave a Comment

தெகிடி என்றால் பகடை ஆடுவது அல்லது தாயகட்டை உருட்டுவதாம்...!



கிரைம், த்ரில்லர் படமாக உருவாகிறது தெகிடி. இதுபற்றி இயக்குனர் பி.ரமேஷ் கூறியதாவது: தெகிடி என்றால் அர்த்தம் என்ன என்று நிறையபேர் கேட்கிறார்கள். இது தமிழ் வார்த்தைதான். பகடை ஆடுவது அல்லது தாயகட்டை உருட்டுவதுபோன்ற விளையாட்டுகளை குறிப்பிடும் மற்றொரு பெயர்தான் இது.

தமிழ் அகராதியில் இதற்கு அர்த்தம் உள்ளது. இப்படத்தின் கதை கிரைம் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. கிரிமினாலஜி பட்டமேற்படிப்பு படித்திருக்கும் ஒரு இளைஞன் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். அவனுக்கு அங்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

அதற்கு தீர்வு எப்படி காண்கிறான், பிரச்னைகளுக்கு என்ன காரணம் என்பதே கதை. கிரிமினாலஜி பட்டமேற்படிப்பு சென்னை பல்கலைகழகத்தில் உள்ளது. அங்குள்ள பேராசியர்களை சந்தித்து இந்த படிப்புபற்றி முழுவிவரம் கேட்டறிந்தேன். கிரிமினல் குற்றவாளிகளை அடையாளம் காணும் சில ரகசிய பாடங்கள் அதில் உள்ளன.

அது பற்றி வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டார்கள். கதைக்கான பின்னணி அமைப்பதற்கான அட்வைஸ் மட்டும் அவர்களிடமிருந்து பெற முடிந்தது. அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயபிரகாஷ், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. நிவாஸ் கே பிரசன்னா இசை. சி.செந்தில்குமார் தயாரிப்பு.

0 comments:

Post a Comment