கோச்சடையான் படத்திற்கு செக் வைக்கப்போகிறது விக்ரமின் ‘ஐ’.
பிரம்மாண்டத்திற்கு பெயரெடுத்த ஆஸ்கார் ரவிசந்திரனும், இயக்குனர் ஷங்கரும் இணைந்து மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கி வரும் படம் ‘ஐ’.
விக்ரம், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் அனைத்து வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் இப்படம் வரும் ஏப்ரல் மாதத்திலேயே அதாவது ரஜினியின் ‘கோச்சடையான்’ வெளியாகும் திகதியில் வெளியாகவுள்ளதாம்.
‘கோச்சடையான்’ அனிமேஷன் படம் என்பதால் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்குமா என்ற கருத்து நிலவிவரும் வேளையில், ‘ஐ’ படமும் வருவதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் ‘ஐ’ பட வெளியீட்டை கொஞ்சம் தாமதப்படுத்தி வெளியிட சொல்லுமாறு ‘கோச்சடையான்’ தயாரிப்பினரை வலியுறுத்தி வருகின்றனராம் விநியோகஸ்தர்கள்.

0 comments:
Post a Comment