Thursday 27 February 2014

Leave a Comment

தமிழக அரசு நோ சொன்னாலும் விடமாட்டேன்... ஏன்னா நான் தனி ஆளில்லை..!



கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பெயர் சூட்டப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்
என்று தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

அன்றுமுதல் தமிழில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்திற்குச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் தமிழ்ப் பெயர்களையே வைக்க ஆரம்பித்தனர். பின்னர் மீண்டும் இச்சட்டம் சில வரைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக U சான்றிதழ் பெறும் திரைப்படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று திருத்தியமைக்கப்பட்டது.

அந்தவகையில் இந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு U சான்றிதழ் வழங்கியிருந்தது.

ஆனால் இப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார் உதயநிதி.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக உதயநிதி கூறியுள்ளார்.

இதே போல இவ்வாண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்களும் உ சான்றிதழ் பெற்றபோதும், கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment