Monday, 17 March 2014

Leave a Comment

எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க - அடம்பிடிக்கும் அமலா பால்...!



மிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல அறிமுகத்தைப் பெற்றிருக்கும் நடிகை அமலா பால் வசம் தற்பொழுது ஓரிரு படங்களே இருப்பதால் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பினைக் கேட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்பே தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம்தான் தமிழக மக்களிடம் ஓரளவு
பரீச்சயமானார் அமலா பால்.


அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், இளையதளபதி விஜயுடன் இவர் நடித்த தலைவா மற்றும் சமீபமாக வெளியாகியிருக்கும் நிமிர்ந்து நில் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் பெயரைத் தந்துள்ளன.


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவந்தாலும் தற்பொழுது தனுஷுடன் இவர் நடிக்கும் வேலையில்லாப் பட்டதாரி மற்றும் மலையாளப்படமான லைலா ஓ லைலா ஆகிய இரண்டு படங்கள்தான் இவர் கைவசம் இருக்கின்றன.


இதனால் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடம் புதிய படங்களுக்கான வாய்ப்புக்களைக் கேட்டு தூதனுப்பிவருவதாகக் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.


சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தினைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி


இயக்கும் படத்தில்
இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்திய செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment