இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிகிறது. மே மாதம் இந்த படம் திரையில் வெளியாகும் என தெரிகிறது.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக இன்னொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் பெயர் “த்ரிஷா இலியானா நயன்தாரா”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் என்பவர் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும், ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்களின் மகனாகத்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றார். கருத்துவேறுபாடு காரணமாக பிரிய நினைக்கும் தாய், தந்தையரை தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும்,
பாசத்தாலும் ஒன்றுசேர்த்து வைக்கும் மகன் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்தை ரிபெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த படத்தின் டைட்டிலுக்காக த்ரிஷா, இலியானா, நயன்தாரா ஆகிய மூன்று நடிகைகளிடமும் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார் ஆதிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும் ஒரே படத்தில் இணைகின்றனர்.

0 comments:
Post a Comment