Tuesday 18 March 2014

Leave a Comment

இசை வாயிலாக எப்போதும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்...!



கமலுடன் நடிக்காவிட்டாலும் அவருடன் இசை மூலம் சினிமா உறவு தொடர்கிறது என்றார் ஸ்ருதி ஹாசன்.


கமல் மகள் ஸ்ருதி ஹாசன் இதுவரை கமலுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. உத்தம வில்லன் படத்தில் கமல் மகளாக நடிக்க வாய்ப்பு வந்தது.


ஆனால் பிறபடங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றார். இதற்கிடையில் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை அமைப்பாளராக ஸ்ருதி அறிமுகமாகி இருந்தார்.

இந்நிலையில் அசாமை சேர்ந்த இசை அமைப்பாளர் ஜாய் பரூவாவுடன் இசை ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஸ்ருதி இணைந்து பணியாற்றுகிறார்.


இதற்காக கமலிடம் பாடல் எழுத கேட்டார். அவர் எழுதிய பாடலை ஸ்ருதியே பாடினார். இது பற்றி ஸ்ருதி கூறும்போது, இந்தியாவின் மற்றொரு பகுதி கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்திருக்கிறது.


இதற்கான தமிழ் பாடலை எனது அப்பா கமல் எழுதி இருக்கிறார்.

தெற்கு ஒரு துருவம் என்ற அப்பாடல் இந்த ஆல்பத்துக்கு பலத்தை தந்திருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை அப்பா கேட்டு பாராட்டினார்.


என் அப்பாவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. ஆனால் இசை வாயிலாக எப்போதும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். என்னுடைய இசை ஆர்வத்துக்கு எப்போதுமே ஊக்கம் கொடுப்பார். அவரது பாடலை பாடுவதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி என்றார்.

0 comments:

Post a Comment