Tuesday, 18 March 2014

Leave a Comment

சிம்புவிற்காக எதையும் செய்யும் குடும்பம்...!



வாலு படத்திற்கு பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.


இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


இதனை பற்றி குரலரசு கூறுகையில், என் முதல் இசை ஆல்பத்தில் என் அண்ணன் மற்றும் என் அப்பா சில பாடல்கள் பாட உள்ளனர்.


அப்பா ஒரு நாட்டுப்புற பாடலும், சிம்பு கிளப் பாடலும் பாடுகிறார். இவர்கள் இருவருடனும் சேர்ந்து நானும் ஒரு பாடலை பாடவுள்ளேன்.


நான் இசைத்த சில டியூன்களை கேட்டு அப்பாவும், அண்ணனும் என்னை பாராட்டியது உற்சாகத்தை தந்தது.


மேலும் தனக்கு தமிழ், தெலுங்கு என்று பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இப்போதுதான் இந்த படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment