தமிழ் சினிமாவின் ‘எவர் கிரீன்’ காமெடி நடிகர் கவுண்டமணி! நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு ஏராளமான படங்களின் முலம் லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்தவர்,
இன்னமும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர்! பெரும்பாலான டிவி சேனல்களுக்கு இவரது காமெடி காட்சிகள் தான் இன்னமும் தீனிப் போட்டுக் கொண்டிருக்கிறது!
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள கவுண்டமணி தற்போது நடித்து வரும் படம் ’49 ஓ’.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவிருக்கும் கவுண்டமணி பிறந்த நாள் இன்று!

0 comments:
Post a Comment