Monday 17 March 2014

Leave a Comment

சமுத்திரகனிக்கு ஜோடியானார் அமலாபால்...!



சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில்.

ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஹீரோ ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிமிர்ந்து நில் படத்தை பார்த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஐ.பி.எஸ். அதிகாரி வால்டர் தேவாரம் போன்றோர்கள் பாராட்டினார்கள்.

இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த சந்தோஷத்துடனேயே எனது அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன்.

எனது அடுத்தப்படத்தின் தலைப்பு ''கிட்ணா''. கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா.

இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில் நானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளேன். என்னுடன் அமலாபால் நடிக்கிறார்.

முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

அமலாபால் 1 வயது முதல் 45 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்.

நான் 35 வயது முதல் 65 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறேன்.

படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.

காடும் காடு சார்ந்த இடமும் தான் எனது படத்தின் கதைக்களம்.

நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார்.

0 comments:

Post a Comment