தனது கானா பாடல்கள் மூலமும், அக்மார்க் சென்னை முகச்சாயல் மூலமும் திடீர் புகழ்பெற்றவர் கானா பாலா.
அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி என்று பாடி வந்தவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
"என்னைய ஹீரோவோ போட்டு யாராவது படம் எடுங்களேன்" என்று மேடைக்கு மேடை தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தவர் இப்போது நிஜமாகவே ஹீரோவாகிறார்.
விஜய்யின் ஆரம்பகால படங்களான நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா ஆகியவற்றை இயக்கியவர் செல்வபாரதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கப்போகும் படம் பாரீஸ் கார்னர்.
இந்தப் படத்தில்தான் கானா பாலா ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆளாகிவிட்டார்கள். செல்வ செழிப்பில் இருக்கிறார்கள்.
ஆனால் சென்னையின் பூர்வகுடி மக்கள் இப்போதும் வறுமையில்தான் இருக்கிறார்கள், கூவத்தின் கரையில் வாழ்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் படம்.
அதில் கானா பாலா பாரீஸ் கார்னரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கிறார்.
படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கானா பாட்டுதான், அவரே பாடுகிறார்.

0 comments:
Post a Comment