Tuesday, 18 March 2014

Leave a Comment

‘இது நம்ம ஆளு’வில் சிம்புவுன் மொத்த குடும்பமே இணைகிறார்கள்..!



பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார் அல்லவா?


 தான் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் படத்தின் பாடல்களை ஹிட் ஆக்குவதில் குறியாக இருந்து செயல்பட்டு வருகிறார் குறளரசன்!


ஏற்கெனவே பல படங்களுக்காக பாடியுள்ள குறளரசனின் தந்தை டி.ராஜேந்தரையும், அண்ணன் சிம்புவையும் இப்படத்தில் பாட வைக்க திட்டமிட்டுள்ள குறளரசன்,


அதற்காக பிரத்தியேக ட்யூன்களை உருவாக்கி வைத்திருக்கிறாராம்.


இந்த ட்யூன்கள் டி.ஆருக்கும், சிம்புவுக்கும் ரொம்பவும் பிடித்து விட்டுள்ளதாம்!


இதன் பாடல் பதிவு விரைவில் நடைபெறவிருப்பதாகச் சொல்லும் குறளரசனும் படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறாராம்!


ஆக, ‘இது நம்ம ஆளு’வில் மொத்த குடும்பமே இணைகிறார்கள்!

0 comments:

Post a Comment