தூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான டர்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடியதால் சர்ச்சைக்குரிய நடிகைகள் வாழ்க்கையை படமாக்க பட அதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பழைய கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார். இதை படமாக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
ஷகிலா கேரளா திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கலக்கியவர். சில படங்களில் ஆடை குறைப்பு செய்து படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
தியேட்டர்களில் ஷகிலா படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், படங்களை பின்னுக்கு தள்ளி ஷகிலா படங்கள் வசூல் சாதனை படைத்தன.
இதனால் ஷகிலாவை கேரளாவில் இருந்து விரட்ட சதிவேலைகள் நடந்தன. பின்னர் அவர் சென்னைக்கு குடி பெயர்ந்தார். இங்கு காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள், படங்களில் நிகழ்த்திய சாதனைகள் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய விவரங்கள் போன்ற விஷயங்களையும் சுயசரிதையில் குறிப்பட்டு உள்ளார்.
சில்க் ஸ்மிதா படம் போல் ஷகிலா வாழ்க்கை கதை படமும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழில்களில் இதை எடுக்கின்றனர்.
இந்த படத்தை தயாரிக்கக் கூடாது என்று ஷகிலாவுக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால் எதிர்ப்பை மீறி வருகிறது.
இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலிதான் பொருத்தமானவர் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள். எனவே அவரிடம் கால்ஷீட் கேட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது. அஞ்சலியும் இதில் நடிக்க விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
டர்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு விருதுகள் குவிந்தன. அது போல் தனக்கும் ஷகிலா படத்தில் நடிப்பதன் மூலம் விருது கிடைக்கும் என அஞ்சலி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

0 comments:
Post a Comment