ஜெயம்கொண்டான், சேட்டை முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் தற்பொழுது இயக்கிவரும் திரைப்படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
விமல் மற்றும் சூரி ஆகியோர் அந்த இரண்டு ராஜாக்களாகவும், பிரியா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்துவரும் இப்படத்தினை குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
சமீபக் காலத்தின் முக்கிய நகைச்சுவைக் காம்போவான விமல் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த
டிசம்பரில் துவங்கின.
இப்படத்திற்கு முதலில் சக்கரை மற்றும் காதல் கொஞ்சம் கம்மி என்ற தலைப்புகள் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டு பின்னர்
ஒரு ஊர்ல ரண்டு ராஜா என்று தலைப்பிடப்பட்டது.
நகைச்சுவை நடிகர் சூரி தற்பொழுது பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இப்படம் சூரிக்கு மிக முக்கியப் படமாக அமையும் என்றும்
கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment