Saturday, 8 February 2014

Leave a Comment

ப்பா....... கெஸ்ட் ரோலே வேண்டாம்..! - விஜயசேதுபதி



மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜயசேதுபதி, ஹீரோயிஸம் என்பது இல்லாமல், கதையின் நாயகனாகவும் வலம் வருகிறார். அதோடு, இரண்டு ஹீரோ கதைகளாக இருக்கும்பட்சத்தில் அதில் தனக்கு பிடிக்கிற கேரக்டரை எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த சூது கவ்வும் ஹிட்டடித்தபோதும், ரம்மி கவுத்து விட்டது.

இந்த படத்தைப்பொறுத்தவரை முன்பே நான் ஹீரோ இல்லை. ஒரு கேரக்டரில்தான் நடித்திருக்கிறேன் என்று விஜயசேதுபதி கூறிவந்தபோதும், அவரை முன்வைத்தே விளம்பரங்கள் முடுக்கி விடப்பட்டிருப்பதால், தோல்வியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. ஆக, ரம்மி மூலம் முதல் தோல்வியை சந்தித்திருக்கிறார் விஜயசேதுபதி.

இந்த நிலையில், இன்று அவரது பண்ணையாரும் பத்மினியும் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் விஜயசேதுபதி, இது எனது ரசிகர்களை ஏமாற்றாது. இதற்கு முந்தைய படங்களைப்போன்று திருப்திகரமான படமாக இருக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

அதோடு, வெற்றி நாயகன் என்றொரு இமேஜ் உருவான பிறகு துக்கடா வேடங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சில அபிமானிகள் அறிவுறுத்தியதை அடுத்து, இனிமேல் கெஸ்ட் ரோல்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளாராம் விஜயசேதுபதி.

0 comments:

Post a Comment