Saturday, 8 February 2014

1 comment

லண்டன் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிவசேனை..!


வெளிநாட்டிற்குச் சென்று பொருளீட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளைப் பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்னும் கருத்தைச் சொல்கிறது சிவசேனை.

புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 28ம் திகதி லண்டன் Cineworld Cinemas திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது.

முழுக்க முழுக்க ஐரோப்பா குறிப்பாக லண்டன் நகரிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் சுஜித், கதாநாயகி தர்ஷியா, இன்னொரு கதாநாயகி அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிவா சேனையின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்.ராதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் மட்டுமல்லாது அவர்கள் அனைவருமே புலம்பெர்ந்து வாழும் தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஒருவரான N ராதா என்று அழைக்கப்படும் நாகரத்தினம் ராதா ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் சித்ரா என்கிற தொலைக்காட்சித் தொடரை 176 எபிசோடுகளுக்கும் மேலாக எழுதி இயக்கி தயாரித்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete