வம்சம் படத்தின் மூலம் அறிமுகமாகி மௌனகுரு, தகராறு படங்களில் நடித்த அருள்நிதி இன்று டிவிட்டரில் இணைந்துள்ளார்.
அருள்நிதியின் டிவிட்டர் முகவரி : https://twitter.com/arulnithitamil
தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் இணைந்து வருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது. முக்கியமாக டிவிட்டர் வலைத்தளம் மிக எளிதாகவும், விரைவாகவும் தங்களது ஆதர்ஷ நாயகர்களைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
குறிப்பாக டிவிட்டர் ஹேஸ் டேக்குகள் மூலம் ஒரு குறிப்பிட்ட படம், நடிகர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள உதவுகின்றன. தமிழ்த் திரை நட்சத்திரங்கள் தாங்களாகவே இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்து வருவதால் அவர்களைப் பற்றிய போலிச் செய்திகளை மறுப்பதற்கும், மக்களுடன் நேரடியாகத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் பேருதவியாக இருக்கிறது.
அண்மையில் விவேக், வடிவேலு ஆகியோரும் டிவிட்டரில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அருள்நிதியின் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கிவரும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

0 comments:
Post a Comment