இன்றைய தமிழ் சினிமாவில் வெறும் காசு பார்ப்பதற்காக மட்டும் படம் எடுக்கும் கோஷ்டிகள் பலர் இருந்தாலும் சில பேர் மட்டுமே கலைக்காக படம் எடுக்கிறார்கள், அந்த வரிசையில் செல்வராகவன் ஒருவர்.
ஆனால் அவர் கடைசியாக எடுத்த இரண்டாம் உலகம் படம் அவர் பெயரை மக்களிடம் நார் நாராக கிழித்து விட்டது, “மயக்கம் என்ன” என்ற ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குனர் இப்படி ஒரு படம் பண்ணிட்டாரே என்ற அவரது ரசிகர்கள் கூட புலம்பினார்கள்.
இது ஒரு புறம் இருக்க இந்த படத்தை பிவிபி நிறுவனத்திடம் லாபநஷ்டத்தில் சரிபாதி என்று சொல்லி பல கோடிகளை அள்ளினர் செல்வராகவன். ஆனால், முதல் நாளே படம் அவுட் என்று தெரிந்தவுடன் பிவிபி நிறுவனம் செல்வராகவன் கழுத்தை நெருக்க ஆரம்பித்தனர், வேறு வழி இல்லாமல் அவர் வாங்கிருந்த விட்டை தயாரிப்பு நிறுவனத்திடம் பறிகொடுத்தார், இது போக இன்னும் சில கோடி தரவேண்டி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
இந்த நேரத்தில் பிவிபி நிறுவனம் உங்க தம்பியின் கால்ஷீட் வாங்கி கொடுத்தால் இந்த பணத்தை கழித்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள், உடனே தம்பி தனுஷிடம் இதை பற்றி செல்வராகவன் சொல்ல எனது வாழ்க்கைக்கு ஒரு விடிவெள்ளியாக இருந்தார் எனது அண்ணன் என்று கண்டிப்பாக தருகிறேன் சொல்லி கால்ஷீட் வாங்கி கொடுத்து உள்ளதாக தகவல். ஆக மொத்ததில் அண்ணன் பட்ட கடன் தம்பி தனுஷின் தயவால் அடைகிறது.

0 comments:
Post a Comment