Wednesday, 19 February 2014

Leave a Comment

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம் - விஜய்க்கு பதில் ஜெய் நடிக்கிறார் ..!



ஜெய் மற்றும் ஸ்வாதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வடகறி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் டப்பிங் வேலைகள்
நிறைவடைந்துள்ளன.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் முன்னாள் உதவி இயக்குனரான சரவண ராஜன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினின் மேகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் வடகறி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளன.

இந்தியாவின் கவர்ச்சிப்புயலான சன்னிலியோன் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment