நடிகர் சல்மான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பை பாந்திராவில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவர் விசாரணை நிலவரத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே சல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹேமந்த் பாட்டீல் என்பவர் ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி சதானா ஜாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிகொள்வதற்காகவே, மனுதாரர் வழக்கு தொடர்ந்து இருப்பதாக சல்மான் கான் தரப்பு வக்கீல் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சல்மான் கான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தார். மேலும், நீதிபதியின் நேரத்தை வீணடித்த காரணத்துக்காக மனுதாரர் ஹேமந்த் பாட்டீலுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

0 comments:
Post a Comment