Tuesday, 25 February 2014

Leave a Comment

அதிர்வு மூலம் செல் ஃபோன்களுக்கு சார்ஜ்….!



சார்ஜிங் என்ற ஒரு கொடுமையான விஷயம் நிறைய பேருக்கு தினம் தினம் பிரச்சினையாக இருக்கு நேரத்தில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைகழகம் மற்றும் இன்னும் சில பல்கலைகழகங்கள் சேர்ந்து அதிர்வு மூலம் மின்சாரம் தயாரிக்கபடும்.

அதுவும் மனிதன் கார் ஓட்டும் போதும் வேலை செய்யும் போதும் இந்த சார்ஜ் அதுவே எறி கொள்ளும் என்பதால் இதை தனியே சார்ஜ் செய்ய தேவையில்லை என்று கூறுகினர் இதன் கண்டுபிடிப்பாளர்கள்.

இது எப்படி சாத்தியம் விளக்கமாய் பார்ப்போம்…………polyvinylidene fluoride, or PVDF இது நேனோ ஜெனரேட்டராய் வேலை செய்யும் ஜின்க் ஆக்சைடை இந்த மெல்லிய PVDF ஃபிலிம்கள் சுற்றபட்டு இருப்பதால் சிறு சிறு மெக்கானிக்கல் ஃபோர்ஸ் இதை உராய்வின் மூலம் மின்சாரத்தை உருவாக்கும்.

இது மொத்தமும் ஸ்பாஞ்சு போல இருக்கும். இந்த நேனோ ஜெனரேட்டர் எலக்ட்ரொட் தகடுகளை இந்த ஃபிலிமின் முன்பும் பின்பும் இருப்பதால் இதை மொபைலின் பின்புற கவரில் பொருத்தினால் மின்சார்ம் நேரே பேட்டரிக்கு சார்ஜ் ஆகும் சாத்தியம் என நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஆயினும் இது நடைமுறைக்கு வர ஒரு வருடம் ஆகலாம் என தெரிகிறது. நீ உரசுனா அப்படியே ஜிவ்வுனு கரென்ட் உடம்பில பாயுது சொன்ன நம்ம தமிழ் சினிமா தான் இதன் இன்ஸ்பிரேஷனோ?

0 comments:

Post a Comment