என்னுடைய படத்தில் நடித்திருந்தால் இதற்குள் பெரிய ஹீரோவாகியிருப்பார் என்று வைபவ் செய்த தப்பை வெளிச்சம் போட்டுக் காட்டினார் டைரக்டர் வெங்கட் பிரபு.
‘சரோஜா’, ‘கோவா’ ஆகிய படங்களில் சின்ன கேரக்டர்களில் வந்து போனவர் வைபவ். அதன்பிறகு சசிக்குமார் டைரக்ட் செய்த ‘ஈசன்’ படத்தில் நடித்தவருக்கு அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் தான் பெரிய அளவில் பேரை வாங்கிக் கொடுத்தது.
தற்போது ‘டமால் டுமீல்’ படத்தில் ஹூரோவாக நடித்து வருகிறார் வைபவ். இந்தப் படத்தின் ஆடியோ பங்ஷன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் வெங்கட்பிரபு வைபவ் என்னுடைய படத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் அவன் எப்போதோ பெரிய ஹீரோவாகியிருப்பான் என்று பேசினார். மேலும் நான் அவரை நடிக்கக் கூப்பிட்ட போது வராமல் போய் விட்டார் என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :
‘சென்னை – 28′ படத்துக்காக வைபவை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கக் கூப்பிட்டேன். ஆனால் அவரோ, எனது அப்பா தெலுங்கில் பெரிய டைரக்டர் என்று சொல்லி அவர் படத்தில் தான் அறிமுகமாகப்போவதாக சென்று விட்டார். அப்படி அவர் மறுத்ததால் தான் அப்படத்தில் ஜெய்யை நடிக்க வைத்தேன். ஆனால், அந்தப் படமே ஜெய்க்கு பெரிய எண்ட்ரியாகி விட்டது.
அதன் பிறகுதான் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய்க்கு சான்ஸ் கொடுத்தார் சசிகுமார். ஆக, இப்போது வைபவ்வை விட தமிழில் பெரிய நடிகராகியிருக்கிறார் ஜெய்.
என் படத்தில் நடித்திருந்தால் வைபவ் எப்போதோ தமிழில் பெரிய ஹீரோவாகியிருப்பார். என்னதான் வாய்ப்புகள் அமைந்தாலும் நேரம் கைகூடும்போதுதான் எதுவும் நடக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொண்டேன். இப்போதும் எனது மங்காத்தா படத்தில் அவருக்கு நான் வெயிட்டான கேரக்டரை கொடுத்ததைப் பார்த்துதான் இந்த டமால் டுமீல் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கமிட் பண்ணியிருக்கிறார்கள்.
ஆக, இப்போதும் கூட வைபவ் முழுமையான ஹுரோவானதுக்கு நான் தான் காரணம். என்றார் வெங்கட் பிரபு.
0 comments:
Post a Comment