அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் நகரின் புகழ்பெற்ற உணவகங்களில் இருந்து உணவு வகைகளை முற்றிலும் தானியங்கி வினியோக நுணுக்கத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகத்தின் உணவு வகையை எளிதாக பயன்படுத்தும் தொடு திரையை பயன்படுத்தி தேர்வு செய்து, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்தினால், 90 விநாடிகளுக்குள் புதிய மற்றும் சூடான உணவு பாக்கெட்கள் கன்வேயர் பெல்ட் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
ஊழியரிடம் ரொக்கம் செலுத்தி ஃபுட்பாக்ஸ் கார்டைப் பெற்று, அதை ஸ்வைப் செய்தும் உணவை ஆர்டர் செய்யலாம்.இத்தகைய இந்தியாவின் முதலாவது முழுமையான தானியங்கி, மல்டி-பிராண்ட் உணவுச் சில்லரை விற்பனை இயந்திரத்திரமான ‘அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ்’ சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் அடையார் ஆனந்த பவன், ஆகிஃப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி, மோத்தி மகால், அமராவதி, காரைக்குடி மற்றும் மிஸ்டர் செளஸ் போன்ற உணவகங்கள் தற்போது இதனுடன் இணைந்துள்ளன.நாட்டில், உணவு மற்றும் சில்லரை வர்த்தகத் துறையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஃபுட் பாக்ஸ், புகழ் பெற்ற உணவகங்களில் இருந்து வழங்கப்பட்ட லேசான சிற்றுண்டி தொடங்கி முழுமையான உணவு வரை அனைத்தையும் 90 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அளிக்கும் ஒரு தானியங்கி உணவகமாகும் என்பது குறிப்பிடத்தக்க்து.
இதையொட்டி ஃபுட் பாக்ஸ் உடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் உணவகங்களிடம் உணவின் அளவு மற்றும் விலையில் முழுமையான திருப்தி குறித்து முதலில் ஆலோசனை நடத்தப்படும். இந்த உணவு 100 சதவீதம் விர்ஜின் பாலிப்ரோபிலின், ஃபுட்-கிரேட் பேக்கேஜிங் பொருட்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட உணவகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு ஃபுட் பாக்ஸ்-க்கு கொண்டு வரப்பட்டு பருவநிலை கட்டுப்பாட்டுடன் சேமித்து வைக்கப்படுவதுடன், அந்த உணவு பரிமாறப்படுவதற்கு முன் தானியங்கி முறையில் சூடுபடுத்தப்படும். இந்த தானியங்கி முறையானது தொடர்ந்து உணவை இருப்பு மற்றும் தேவை அடிப்படையில் புதுப்பித்து, அதன் மூலம் உணவு வீணாவது குறைக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும் உணவு எப்போதும் புதிதாக இருப்பது உறுதிச் செய்யப்படுகிறது.
இந்த ஃபுட பாக்ஸ் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், அட்சயம் நிறுவனத்தின் சி.ஒ.ஒ மற்றும் சி.எப்.ஒ ரமேஷ் நாராயணன், அட்சய நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ சதிஷ் சாமிவேலுமணி, அட்சயம் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப வல்லுநர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இந்த தானியங்கு உணவு விற்பனை இயந்திரத்தைப் பற்றி கூறிய அட்சயம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சதீஷ் சாமிவேலுமணி, “பயணத்தின் போதோ அல்லது அவசரத்தின் போதோ, சுவையான, நம்பிக்கைக்குரிய மற்றும் சுத்தமான உணவு கிடைப்பதில் உள்ள சவால்களை நாங்கள் புரிந்து கொண்டிருப்பதால், இந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து இந்த முறையை உருவாக்குவதற்கு எங்களுக்கு 3 ஆண்டுகள் ஆனது.
எனது பங்குதாரர்களான ராஜசேகரன் மதுரம் மற்றும் ரமேஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்து பல்வேறு புகழ்பெற்ற, உள்ளூர் உணவகங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, இந்த தனித்தன்மையான மற்றும் சுவாரஸ்யமான உனவருந்தும் மற்றும் உணவை வாங்கிச் செல்லும் அனுபவத்தை சென்னையில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் நாங்கள் இந்தப் புதுமையை இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்வோம்.”என்றார்.
அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் தற்போது சென்னையில், டி.எல்.எஃப் ஐடி பார்க் மற்றும் கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. அடையார் ஆனந்த பவன், ஆகிஃப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி, மோத்தி மகால், அமராவதி, காரைக்குடி மற்றும் மிஸ்டர் செளஸ் போன்ற உணவகங்கள் தற்போது இதனுடன் இணைந்துள்ளன. இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் 2015ல் மேலும் 6 விற்பனையகங்களையும், விரைவில் தேசிய அளவில் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது
0 comments:
Post a Comment