Sunday, 23 February 2014

Leave a Comment

கங்கையின் மாசு நீங்க ரூ.6500 கோடி செலவிட்டும் பிரயோஜமில்லையே..!



பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் .யமுனையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ’இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டும், தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டிய யமுனை ஆற்று நீரின் கருப்பு நிறம் இன்னும் மாறவில்லையே என்று மத்திய அரசு கவலைக் கொண்டுள்ளது.


கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா போன்ற பெரிய ஆறுகள் நமது நாட்டின் நீர் ஆதாரத்துக்கான தேவையை நிறைவு செய்வதில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றில், யமுனை இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தின் இமய மலை பகுதியியில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா வழியாக பாய்ந்து, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ தூரம் வளைந்து, நெளிந்து ஓடி வட மாநிலங்களின் பெரும்பகுதி விளைச்சல் நிலங்களுக்கு தேவையான நீராதாரத் தேவையை யமுனை ஆறு நிறைவேற்றி வருகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க்து.

இதற்கிடையில் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கி றது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரை யில் எரிக்கப்பட்டு கங்கை யில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன – மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக் கணக்கில் மாண்டனர்.

இதையடுத்து வெளியான இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவி ல் மற்ற மற்ற பகுதிகளில் எல் லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94என்றால் கங்கைபாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும். பீகாரில் துர்காபூர், பொகாரோ, பி லாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந் தும், உரத் தொழிற்சாலைகளி லிருந் தும் அம்மோனியா, சயனைடு நைட் ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்ச த்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

மேலும் கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலைகளின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே – அந்தக் கங்கையில்தான்.இவற்றை எல்லாம் விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனாலும் அங்கு இப்போதும் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்து இருந்தது.

இதையடுத்து இந்த மாசுகளை அகற்றவும், மேலும் மாசடையாதபடி யமுனை ஆற்றை பாதுகாக்கவும் மத்திய ஊரக மேம்பாட்டு துறையின் சார்பில் டெல்லி துணை நிலை கவர்னரின் தலைமையில் 31 எம்.பி.க்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில் யமுனையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ’இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டும், தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டிய யமுனை ஆற்று நீரின் கருப்பு நிறம் இன்னும் மாறவில்லையே… ’என மத்திய ஊரக மேம்பாட்டு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு வேதனை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment