சமந்தா நடித்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இயக்குனர் தவிக்கிறார். தமிழில் விஜய், சூர்யா ஜோடியாக நடிப்பதுடன் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. நாக சைதன்யா ஜோடியாக ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு முன்பே இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் வரும் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பட இயக்குனர் தேவ கட்டா கூறும்போது,படத்தை இயக்கி முடித்தபின் அப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் பொறுப்பு.
ரிலீஸை பொறுத்தவரை ரசிகர்களைப்போல் நானும் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தற்போது ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
அதை நம்புகிறேன். இதற்கிடையில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்திருக்கிறேன். மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment