Sunday, 23 February 2014

Leave a Comment

நீச்சல் உடையும், முத்தக்காட்சியும் எனக்கு செட் ஆகாதுங்க..!



தோல்வி பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா. 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து வெற்றிகரமாக ஓடிய ஹிம்மத்வாலா படத்தை அதே பெயரில் சாஜித்கான் கடந்த ஆண்டு இயக்கினார்.

இதில் அஜய் தேவ்கன், தமன்னா ஜோடியாக நடித்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தோல்வி அடைந்தது. தற்போது சாஜித் கான் ஹம்சகல் என்ற புதிய படம் இயக்குகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். தோல்வி பட இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. அவர் கூறும்போது,ஒரு தோல்விபடம் என்பது என்னுடைய திரையுலக வாழ்க்கையின் முடிவு கிடையாது.

சாஜித் கானும், தயாரிப்பாளர் வாசு பக்னானியும் என் மீது இன்னும் நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்துள்ளனர். ஹிம்மத்வாலா நான் நடிக்கும் முதல் படமாக இருந்திருந்தால் அப்போது என்ன சொல்லி இருப்பேன் என்று தெரியாது. இந்தியில் ஏற்கனவே நடித்திருப்பதுடன் தென்னிந்திய படங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

நான் ஒரு நாளில் முன்னணிக்கு வந்த நடிகை இல்லை. அந்த இடத்தை பிடிக்க பல படங்களுக்கு மேல் நான் நடித்த பிறகுதான் முடிந்தது. நீச்சல் உடை அணிவதும், முத்தக்காட்சியில் நடிப்பதும் என்னால் முடியாத காரியம் என்றார்.

0 comments:

Post a Comment