Saturday, 8 February 2014

Leave a Comment

அஞ்சான் படப்பிடிப்பில் சமந்தாவின் இரக்க்குணம்...!



அஞ்சான் படப்பிடிப்பில் செம சூடாகிவிட்டாராம் சமந்தா.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்திற்கான ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மகாராஷ்ட்டிரா மாநிலம் புனே-யிலிருந்து 98 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பஞ்ச்கனி என்ற இடத்தில் நடந்தது.

ரொம்பவும் ‘ஹாட்’ ஆன அந்த இடத்தில் ’எனர்ஜெட்டிக்’ ஆன ஒரு டான்ஸ் ஆடியிருக்கிறார் சமந்தா.

இதுகுறித்து சமந்தா டுவிட்டரில், ரொம்பவும் ஹாட் ஆன இடம், என் கூட ஆடிய டான்ஸர்களுக்கு குடை, கேரவேன், ஜூஸ் எதுவும் இல்லை, இருந்தாலும் அவங்க எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடனம் ஆடினார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment