Saturday, 8 February 2014

Leave a Comment

கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”



கூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் “கள்ளப்படம்” . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.

இந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் படத்தின் இசையமைப்பாளரான “கே” வும், எடிட்டர் வேடத்தில் படத்தின் எடிட்டரான கௌகினும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக லஷ்மி ப்ரியா நடிக்கிறார்.

“ஸ்க்ரிப்ட் நன்றாக வந்திருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரலாம். முன்னேறணும் என ஆசைப்படுவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்யமும்தான் கதை. லக்மி ப்ரியா நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் பாடியிருக்கும் “வெள்ளைக்கார ராணி” எனும் பாடல் பெரிய அளவில் பேசப்படும். இந்தப் பாடல் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமையும்” என்கிறார் இயக்குநர் வடிவேல்.

0 comments:

Post a Comment