மார்க்கெட் இல்லாத ஹீரோக்களுக்கும் தாராளமாக கால்ஷீட் ஒதுக்கி தருவதால் மளமளவென வாய்ப்புகளை அள்ளுகிறார் பிந்து மாதவி.
நடித்து பெயர் வாங்கும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள், டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு மார்க்கெட்டை உயர்த்தி கொள்ளும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள். இவர்களில் இருந்து வித்தியாசமான பாணியை கையாள்கிறார் பிந்து மாதவி.
மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் என்றாலும் துணிச்சலாக கால்ஷீட் தந்து படங்களை தன்வசப்படுத்தி வருகிறார். விஷ்ணு, அட்டகத்தி தினேஷ் போன்றவர்களுக்கு தற்போது மார்க்கெட் டல் ஆனாலும் அவ்வப்போது ஹீரோ வாய்ப்பு பெற்று கரன்ட்டில் இருக்கிறார்கள்.
இவர்களுடன் ஜோடி போட பெரிய ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்கும் போது ஜகா வாங்கி விடுகின்றனர். ஆனால் அந்த ஹீரோக்களையும் அரவணைத்து கொள்ளும் சாக்கில் பட வாய்ப்புகளை சத்தமில்லாமல் அள்ளிக் கொண்டிருக்கிறார் பிந்து மாதவி.
சுரேஷ் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் கலக்குற மாப்பிளே படத்திலும், தினேஷுடன் தமிழ் பேச எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் பிந்து நடிக்கிறார்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு வசதியாக சம்பளத்தையும் கணிசமாக வாங்கி கொள்வதால் அவர் மீது இயக்குனர்களின் பார்வை பதிந்திருக்கிறதாம். எதை பற்றியும் கவலைப்படாமல் தாராளமாக கால்ஷீட் ஒதுக்குவதால் பிந்து மாதவி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறதாம்.

0 comments:
Post a Comment