Friday, 7 February 2014

Leave a Comment

எஸ்.பி.ராஜ்குமாரின் புதிய படம் - பாக்கணும் போல இருக்கு...!




கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுக்கு பல படங்களில் காமெடி காட்சிகள் எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். அவர் இயக்கும் புதிய படம் பாக்கணும் போல இருக்கு. இதுபற்றி அவர் கூறியதாவது:

காமெடி காட்சிகள் என்னை பெரிய அளவில் பேச வைத்திருந்தாலும் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய போது இன்னும் அதிகளவில் என்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடிந்தது. பொன்மனம், என் புருசன் குழந்தை மாதிரி, கார்மேகம் ஆகிய படங்களையும் இயக்கினேன்.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு என 3 பேருக்கும் காமெடி எழுதிய போது வெவ்வேறு பாணியை பின்பற்ற வேண்டி இருந்தது. இப்போது வரும் படங்களில் காமெடி டிரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது.

அதை மனதில் நிறுத்தித் தான் பாக்கணும் போல இருக்கு படத்தின் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். லைட்டா ஒரு காதல் வெயிட்டா ஒரு காமெடி என்ற பாணியில் இது படமாகி உள்ளது.

பரதன் ஹீரோ. கீத்திகா ஹீரோயின். சூரி, கஞ்சா கருப்பு பிளாக் பாண்டி, முத்துக்காளை, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்தேவ் இசையில் பவதாரிணி, ஹரிஹரன், கார்த்தி, சைந்தவி 6 பாடல்கள் பாடி உள்ளனர். துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

0 comments:

Post a Comment