Friday, 7 February 2014

Leave a Comment

மாயாஜாலத்துக்கு மாறும் மிஷ்கின்..!



சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என கிரைம், த்ரில்லர் படங்களாக இயக்கிவந்தார் மிஷ்கின். ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் மற்ற படங்கள் அவரை கைவிட்டது. கடைசியாக இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு போஸ்டர் ஒட்டக்கூட பணம் இல்லாமல் தானே ஊர் ஊராக சென்று படத்தின் பப்ளிசிட்டிக்காக போஸ்டர் ஒட்டினார். இதையடுத்து தனது பட ஸ்டைலை மாற்ற முடிவு செய்திருக்கிறார்.

 ஹாரிபார்ட்டர் போன்ற ஹாலிவுட் பாணியில் அடுத்த படத்தை மாயாஜால பின்னணியில் இயக்க உள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் பிளாடிமோரில் உள்ள எட்கர் ஆலன் போ மியூசியத்துக்கு நேரில் செல்ல முடிவு செய்துள்ளார்.

அதை முழுமையாக பார்வையிட்டு அதே சாயலில் தனது படத்துக்கான லொகேஷன் பின்னணியை வரைந்து செட் அமைக்க எண்ணி உள்ளாராம். விரைவில் இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment