Friday, 7 February 2014

Leave a Comment

துப்பறியும் ஆனந்த் - படத்தை கௌதம் அஜீத்தை வைத்து...




அஜீத்தை போல இதயம் கொண்ட ஒருவர் இன்டஸ்ட்ரியில் இல்லை என்று தெரிவித்துள்ளார் கௌதம்.

துப்பறியும் ஆனந்த் படத்தை கௌதம் அஜீத்தை வைத்து செய்வதாக இருந்த நேரம். முழுக்க கதையை சொல்லவில்லையா இல்லை கதையை அஜீத் மாற்றச் சொன்னாரா தெரியாது. கௌதம் படத்திலிருந்து அஜீத் விலகினார். அப்போது கௌதமிடம் எப்போது தல படத்தை இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு யார் தல என்று கேட்டார் கௌதம்.

காத்திருந்து படம் பண்ண அவர் என்ன சூர்யாவா இல்லை கமலா என்றும் கேட்டார். காலம் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும்.

நடுநிசி நாய்கள், நீதானே என்பொன்வசந்தம் படங்களின் தோல்வி, கோடிகள் கேட்டு நண்பர்களின் நீதிமன்ற நெருக்கடி, சூர்யாவின் திடீர் வெளியேற்றம் என்று கௌதமின் கதை வெளிறிக்கிடந்த நேரம் விரும்பி உள்ளே வந்தார் அஜீத். கௌதம் எனக்கொரு படம் பண்ணுங்க, தயாரிப்பாளர் ரத்னம் என்று ரத்தின சுருக்கமாக கௌதமின் எதிர்காலத்துக்கு பிரகாசமூட்டினார்.

அன்று அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்றவர் இன்று அஜீத்தை உள்ளத்தில் நல்ல உள்ளம் என கொண்டாடுகிறார். பிளந்தால்தான் பலாப்பழத்தின் டேஸ்ட் தெரியும்.

0 comments:

Post a Comment