சினிமாவின் மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம்.
90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.
தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது ஓகே தான். ஆனால் எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற வேண்டும், ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.
படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன்.

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.
ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது.
படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.
இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

0 comments:
Post a Comment