ஷாருக்கான் - இந்த பெயரை தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்படும் புகழ் பெற்ற நடிகர் தான் ஷாருக்கான். பாலிவுட் திரை உலகத்தை ஆட்சி செய்யும் முடிசூடா மன்னனாக அவர் திகழ்வது அனைவரும் அறிந்ததே. 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி பிறந்த அவர் இன்று ஒரு புகழ் பெற்ற நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் ஒன்றும் சுலபத்தில் வாழ்க்கையில் முன்னேறி விடவில்லை. இந்த இடத்தை அடைய அவர் பல தடை கற்களையும் உடைத்தெறிந்து கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஒரு மேஜர் ஜெனரல் ஆவார். அவரின் தாயார் ஒரு குடும்ப பெண்மணி ஆவார். டெல்லியில் படித்த அவர் தொலைக்காட்சி நாடகமான "சர்கஸ்" மூலம் இந்த துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அதன் பின் "தி இடியட்" மற்றும் "ராம் ஜானே" ஆகிய படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
மிக குறுகிய காலத்திலேயே ஒரு சிறந்த நடிகராக பல ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியேறினார். ஆனால் அதனை அவ்வளவு சுலபத்தில் அவர் அடைந்து விடவில்லை. சினிமா துறையை சாராத குடும்பத்தில் இருந்து வந்தவரான அவர் இந்த இடத்தை அடைய மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. ஷாருக்கானின் வாக்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. ஊக்கம் மற்றும் ஆர்வம் ஏற்படுத்தும் வாழ்க்கை பாடங்களை அவர் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். அப்படி சிலவற்றை இப்போது பார்க்கலாமா?
ஷாருக்கானின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது இதை தான். பெரிதாக சாதிக்க வேண்டும் என்றால் பெரிதாக யோசியுங்கள். பெரிதாக யோசித்து பெரிய சாதனைகளை அடைவதற்கு முதலில் உங்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியமான ஒன்றாகும். நமக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து இந்த பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார் ஷாருக்கான்.
மும்பையில் உள்ள ஒரு ஆடம்பரமான பகுதியில் மிகப்பெரிய சமுத்திரமான அரேபிய கடலை நோக்கியவாறு ஒரு பெரிய மாளிகைக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று ஷாருக்கான் ஒரு காலத்தில் கனவு கண்டுள்ளார். இன்று அதை நிறைவேற்றியும் உள்ளார். ஷாருக்கானின் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது; கனவு காணுங்கள் - அந்த கனவை நோக்கி தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.
ஷாருக்கான் கௌரி கான் என்ற ஹிந்து பெண்ணை மணந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. டீனேஜ் வயதில் முளைத்த இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. மதம் மாறி திருமணம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது இவர்களின் திருமணம். மதங்களுக்கு அப்பார்ப்பட்டு ஷாருக்கான் அவர் மனைவி கௌரியிடம் கொண்டுள்ள காதலும் கூட நமக்கெல்லாம் ஒரு பாடம்.
கடினமாக உழைக்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ஷாருக்கான். பாலிவுட் திரையுலகத்திற்குள் நுழையும் போது எந்த வித ஆதரவும் இன்றி தான் அவர் உள்ளே நுழைந்தார். சினிமா துறையில் நீடித்து வந்த பெரிய பாலிவுட் குடும்பத்தில் இருந்து அவர் வரவில்லை. இருந்தாலும் கூட பாலிவுட் சினிமா துறையில் ஆழமாக வேரூன்றி இன்று ஒரு அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார்.
இவை அனைத்தும் அவர் தன் வேலையின் மீது வைத்திருந்த ஈடுபாடு, காதல் மற்றும் பக்தியாலேயே சாத்தியமானது. இந்த பாடத்தை அவர் வாழ்க்கையில் இருந்து நாம் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி, கடின உழைப்பு, ஈடுபாடு மற்றும் காதல் இருப்பது அவசியமான ஒன்றாகும்.
ஷாருக்கானின் "மண்ணத்" இல்லத்தில் ஒரு தனித்துவம் உள்ளது. அங்கு ஹிந்து கோவில் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலமும் உள்ளது. திருமணத்திற்கு பின்பு அவர் தனது மனைவியை ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்தவில்லை. சொல்லப் போனால் அவர் இரண்டு மதத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்.
அவர் குழந்தைகளுக்கும் கூட இரண்டு மதத்தின் கோட்பாடுகளும் கற்று தரப்படுகிறது. நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்களில் இதுவும் ஒன்றாகும். மதத்தினால் ஏற்படும் பிரிவினை மற்றும் பாகுபாடுகளை நாம் கண்டிப்பாக ஆதரிக்க கூடாது.
இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். ஷாருக்கானின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. அவரை பற்றியும் அவரின் வாழ்க்கையை பற்றியும் நாம் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னும் ஆழமாக போக வேண்டியிருக்கும். ஆரம்ப நிலையில் இருந்து வாழ்க்கையை தொடங்க முற்படுபவர்களுக்கு அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஒரு பாடமாக அமையும்.
0 comments:
Post a Comment