இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் படத்தை சொல்லலாம். ஏற்கனவே துப்பாக்கி என்ற பிளாக்பஸ்டர் கொடுத்த பிறகு இந்த கூட்டணியை எதிர்பார்க்க மாட்டாங்களா என்ன..
தற்போது இப் படத்தின் கதையை தெரிந்தோ தெரியாமலோ இப் படத்தின் வில்லனாக நடிக்கும் பெங்காலி நடிகர் தோட்ட ராய் கசிய விட்டு இருக்கிறார். கதைப்படி நடிகர் தோட்ட ராய் இப்படத்தில் வெளிநாட்டு தாதாவாக நடிக்கிறார்.
இவரை பிடிக்க கொல்கத்தா போலீஸ் துப்பறியும் கம்பெனியை நடத்தி வரும் விஜய்யோட உதவியை நாடுகிறது, விஜய் தன்னுடைய துப்பறியும் மூளையை கசக்கி பல திட்டங்களை வகுத்து இண்டர்வல் பிளாக்கில் பிடித்து விடுகிறார்.
தன்னை பிடித்து கொடுத்த விஜய்யை பழிவாங்க கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் வில்லன் நடிகர் தோட்ட ராய், விஜய்யை கொலை செய்ய தேடும்போது தான் தெரிகிறது விஜய்யை போல் இன்னொருவர் இருக்கிறார் என்று, பிறகு விஜய்யை அவர்கொலை செய்தாரா, இல்லை வழக்கம் போல் விஜய்யே வில்லனயை புரட்டி போட்டு எடுத்தாரா என்ற பல திருப்பங்களுடன் வெளிவர இருக்கும் விஜய் – ஏ. ஆர் முருகதாஸ் படத்தின் கதை இது தாங்க.

thank you for giving the latest tamil cinema news keep it up
ReplyDeletejob consultancy in coimbatore