ஹீரோவாகிவிட்டதால் இனி இரட்டை அர்த்த வசனங்களை பேசப்போவது இல்லை என்று சந்தானம் முடிவு செய்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம் தான். ஒரு நாளைக்கு இத்தனை இலட்சம் என்று அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்து சில ஹீரோக்களே வயித்தெரிச்சல் படும் அளவுக்கு மனிதர் உள்ளார்.
இந்நிலையில் அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை பிரசாத் வி. பொட்லூரியுடன் சேர்ந்து சந்தானமும் தயாரிக்கிறார். அவர் முன்னதாக தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.எஸ். ராஜமவுலியின் தெலுங்கு ஹிட் படமான மரியாத ராமண்ணாவின் ரீமேக் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
சந்தானம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி மக்களை சிரிக்க வைப்பவர். மேலும் இதற்காகத் தான் அவர் அடிக்கடி கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.
சந்தானத்திற்கு அம்மா என்றால் உயிர். அவரிடம் இனிமேல் இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஹீரோவாகிவிட்ட அவர் இனிமேல் இரட்டை அர்த்த வசனங்களை பேச மாட்டேன் என்று முடிவு செய்துள்ளாராம். அது சரி ஹீரோவாகிவிட்டு அப்படி பேசினால் நல்லாவா இருக்கும்.

0 comments:
Post a Comment