கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் ஜோடியாக நடிப்பதற்கான நடிகை, படத்தின் மற்ற கேரக்டர்களுக்கான கலைஞர்களின் தேர்வில் பிசியாக இருக்கிறார் இயக்குனர் பாலா.
கிராமிய நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது.
இப்போது அந்த கேரக்டருக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மற்றும் ஷ்ராவந்தி ஆகியோரும் பரிசீலனையில் இருக்கிறார்களாம்.
ஸ்ரேயா, வரலட்சுமி ஆகியோர் நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் இவர்களில் யார் பாலாவின் சாய்ஸாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.
இந்தப் படத்திற்கான அனைத்து பாடல்களையும் இளையராஜா ஏற்கெனவே அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment