உத்தம வில்லன்’ படத்தில் உலகநாயகனுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் உத்தமவில்லன்.
இந்தப்படத்தை கமல்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காஜல் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான மாதிரித்தான். த்ரிஷா ஏற்கனவே கமலுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடித்தவர். அதனால் அவரும் ஓகே சொல்லிவிடக்கூடும். அப்புறம் கமல் படம் என்றால் தமன்னா சம்மதம் தெரிவித்துவிடுவார்.
இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார்.
படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 24ம்தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது. அன்றுதான் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பும் முறைப்படி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:
Post a Comment