Tuesday, 11 February 2014

Leave a Comment

சந்தானத்துடன் நடிக்க தயங்கும் சூரி...!



எப்பவுமே முன்னனி ஹிரோவாக இருந்தாலும் கூட சரி அவர்களை கலாய்ப்பது சந்தானத்தின் வழக்கம். நான் ஹிரோ சந்தானம் என அடிக்கடி ஞாபக படுத்தி வருவார்கள் ஹிரோக்கள்.

இந்த நிலையில் ஒரு காமெடியனை எந்த அளவிற்கு கலாய்ப்பார் சாந்தானம் என்று எண்ணிய சூரி, சந்தானம் நடிக்கும் படத்தில் இரண்டவது காமெடியனாக தன்னை நடிக்க கூறி கேட்டு வருபவர்களை அதிரடியாக மறுத்து விடுகிறாராம் சூரி.

அதோடு  நீங்கள் ஒரு வசனம் சொல்லி நடிக்க சொல்வீர்கள், சந்தானம் கவுண்டமணி செந்திலை மதிப்பது போல் அவர் என்னை மதிப்பார்.

இப்பொது எனக்கும் ஒரு மார்க்கெட் உருவாகும் நிலையில் இது தேவையானு கேட்கிறாராம் சூரி.

சசிகுமார் நடித்திருக்கும் பிரம்மன் படத்தில் சந்தானமும் சூரியும் நடித்துள்ளனர் இதில் கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு வரும் சசிகுமாருக்கு கிராமத்து நண்பனாக சந்தானமும், நகரத்து நண்பனாக சூரியுமாக நடித்துள்ளார்கள்.

இதில் இருவரும் சேர்ந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லையாம். இதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சூரி.

0 comments:

Post a Comment