சாலையோரம் படத்துக்காக புறநகர் குப்பை கிடங்கில் ஷூட்டிங் நடத்திய பட யூனிட் சாப்பிட முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி பட இயக்குனர் மூர்த்தி கண்ணன் கூறியதாவது:
துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகள் ஒருவருக்கும் மலரும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
ஹீரோவாக நடிக்க அழகான இளைஞர்கள் பலர் வந்தனர்.
அவர்கள் கதைக்கு பொருந்தாததால் தேர்வு செய்யவில்லை. கருப்பான, அழுக்கான ஒரு வாலிபருக்காக காத்திருந்தேன்.
பல மாதம் தேடுதலுக்கு பிறகு ராஜ் என்பவரை பார்த்தேன். அவரை ஹீரோவாக்கினேன்.
டாக்டர் மகள் என்றதும் அழகான தோற்றம் வேண்டும் என்பதற்காக பளிச்சென்று கண்ணுக்கு தென்பட்ட செரீனா ஹீரோயினாக தேர்வானார்.
வில்லனாக பாண்டியராஜன் நடிக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் சென்னை புறநகரில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் பல நாட்கள் நடந்தது. துர்நாற்றத்துக்கு மத்தியில் சாப்பிட முடியாமல் தவித்தாலும் பல நாட்கள் பட்டினியாக கிடந்து பட யூனிட்டார் பணியாற்றினார்கள்.
முருகன் சுப்பராயன் தயாரிக்கிறார். சேதுராம் இசை. தினேஷ் சீனிவாசன் ஒளிப்பதிவு.
0 comments:
Post a Comment